பி.எச்டி., அவர்கள், தலைமை தாங்கினார்கள். மாணவர் அறிவுடை நம்பி இறை வணக்கம் பாடக் கூட்டம் தொடங்கியது. மாணவர் தலைவர் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். தலைவர், வள்ளுவப் பேராசானின் வாய்மை மொழிகளை உலக வழக்குடன் ஒப்பிட்டு உணர்த்தினார். சிறப்புப் பொழிவு நிகழ்த்திய திரு. தமிழண்ணல், எம்.ஏ., அவர்கள் ‘மாணவர் நெஞ்சில் வள்ளுவர்’ என்ற பொருள் குறித்துப் பேசினார். மாணவர் மன்றச் செயலர் நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் கூட்டம் முடிந்தது. 2. வருணனைக் கட்டுரைகள். நம்முடைய காட்சிப் புலத்தால் உணரப்பட்டு உள்ளதை உள்ளவாறே வருணித்து உரைத்தலே வருணனைக் கட்டுரைக ளாகும். அவை ஆறு, கடல், காடு, மலை முதலிய இயற்கைப் பொருள்கள் பற்றியும் அமைக்கப்படலாம்; கல்லோவியங் களாகத் திகமும், மாமல்லபுரம்,காஞ்சீபுரம், மலைக்கோட்டை, செஞ்சிக் கோட்டை போன்றவற்றைப் பற்றியும் எழுதப் படலாம்; வரலாற்றுப் புகழ்பெற்ற வளநகர்களைப் பற்றியும் வருணிக்கப்படலாம். கடற் செலவுகள் வான்வழிச் செலவுகள், விண்வெளிச் செலவுகள் ஆகியவை பற்றியும் எடுத்து மொழியப்படலாம்; இவை யாவும் வருணனைக் கட்டுரையின் பாற்படும். எடுத்துக்காட்டாகத் தமிழ் முனிவர் திரு. வி. கலியாண சுந்தரனார், தம் இலங்கைச் செலவு குறித்து எழுதிய கட்டுரையில் ஒரு பகுதியை இங்கே காண்க. எனது இலங்கைச் செலவு “பொழுது செவ்வனே புலர்ந்து. எங்கள் பேறே பேறு! வழிநெடுகப் பசுமை உமிழும் மலைகளின் செறிவும், சூழலும் நிரையும், அணியும் உள்ளத்தைக் கவர்கின்றன. முகிற்குழாய்கள் மூண்டெழுந்து படிப்படியே அசைந்தும், ஆடியும், ஓடியும் மலை முகடுகளிற் சூழ்ந்து தவழ்ந்து பாகைபோல் பொதியுங் காட்சியும்-அம் மலைகளின் உடல் புலனாகாவாறு பசும்பட்டுப் போர்த்h லெனப் பொழில்கள் துதைந்துள்ள அழகும்-புலன்களை ஒன்றச் செய்கின்றன. மலையுச்சியினின்றும் தரைவரை நிரைநிரையாகச், சரிந்தும் செறிந்தும் நிற்கும் தெங்கின் பெருக்கும், அவ்வாறே |