130 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
கட்டுரைகள் 1. செய்தித் தாள்களுக்குச் செய்திப்பத்திகள் எழுதியனுப்புதல் ஒரு பொருள் குறித்துத் தங்கள் உள்ளத்தில் எழுந்த கருத்துக் களைக் கோவைப்பட எழுதுதலையே கட்டுரை என்கிறோம்.அக் கட்டுரை பல திறத்தன. அவற்றுள், சில கட்டுரைகளை இவண் பயில்வோம். பள்ளியில் நடந்த விழாக்கள் பற்றிச் செய்தித் தாள்களுக்கு எழுதியனுப்ப மாணவர்கள் பயிற்சி பெறுதல் வேண்டும். காட்டாக, பள்ளியில் நடைபெறும் வள்ளுவர் விழா, பாரதி விழா, இலக்கிய விழா, தமிழர் திருநாள் முதலிய விழாக்கள் குறித்து எழுதியனுப்பலாம். எடுத்துக்காட்டுச் செய்திப்பத்திகள்: (அ) காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் 14-8-’67 திங்கட்கிழமையன்று இலக்கியத் கழகவிழா நடைபெற்றது. மாணவர் ஒருவர் இறை வணக்கம் பாடக் கூட்டம் தொடங்கியது. பள்ளித் தலைமையாசிரியர் யாவரையும் வரவேற்றார். தலைவரான பண்டாரகர் திரு.வ.சுப. மாணிக்கம் அவர்கள் தம் முன்னுரையில், தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், தனித் தன்மையையும் சான்றுகள் காட்டி நிறுவினார். பள்ளி மாணவர்களான அறிவழகனும், வளவனும் சிறு சொற்பொழிவு நிகழ்த்தினர். தலைவர் தம் முடிவுரையில், தாய்மொழி இலக்கியங்கள் தமிழர் யாவராலும் போற்றப் பெற்றுப் புரக்கப் பெறல்வேண்டுமென்றார். கழகச் செயலாளர் நன்றிகூற நாட்டுப் பண்ணுடன் கூட்டம் இனிது நிறைவெய்தியது. (ஆ) மதுரை நகராட்சி உயர்நிலைப் பள்ளி (செனாய் நகர்)யில் 20-6-’67 செவ்வாய்க்கிழமை யன்று வள்ளுவர் விழா நிகழ்ந்தது. அவ்விழாவிற்குப் பண்டாரகர் திரு. அ. சிதம்பரநாதன், எம்.எ., |