இப்பாடலில், அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்த என்னும் சொற்கள் ‘மலர்ந்தன’ என்னும் ஒரே பொருளில் திரும்பத் திரும்ப வந்துள்ளன. எனவே, இது பொருட் பின்வரு நிலையணியாகும். 3. சொற்பொருட்பின்வருநிலையணி “வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார்.” இப் பாடலில், ‘வைகல் என்ற முன் வந்த சொல்லே, பின்னும் பலவிடத்தும் வந்து ‘நாள் தோறும்’ என்னும் ஒரே பொருளைத் தந்தமையின் இது சொற்பொருட்பின்வருநிலை யணியாகும். பயிற்சி வினாக்கள் 1.வேற்றுப்பொருள் வைப்பணியாவது யாது? சான்று தருக. 2.வேற்றுமையணியை ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்குக. 3.இரட்டுற மொழிதலின் இலக்கணத்தையும், அதன் மறு பெயரையும் கூறுக. 4.பிரிமொழிச் சிலேடை அணிக்கோர் சான்று தருக. 5.மடக்கணியாவது யாது? ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்குக. 6.வஞ்சப் புகழ்ச்சி அணியின் இலக்கணத்தைக் கூறுக. 7.பின்வரும் பாடலில் உள்ள அணியைக் கூறி விளக்குக. ‘தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்.’ 8.சொற்பொருட்பின்வருநிலையணி எத்தனை வகையாக வரும்? அவை யாவை? ஏதேனும் ஒன்றிற் எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக. |