பக்கம் எண் :

128கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

எனவே, இப்பாடலில் புகழ்வது போலப் பழித்தலும், பழிப்பதுபோலப் புகழ்தலும் ஆகிய இரண்டும் ஒருங்கே அமைந் துள்ளன. இது வஞ்சப் புகழ்ச்சியாகும்.

6. சொற்பொருட் பின்வருநிலையணி

ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பலவிடத்தும் வருமாயின், அது, சொற்பொருட் பின்வருநிலை அணி எனப்படும்.

அங்ஙனம் வரும்பொழுது,

1. முன்வந்த சொல்லே பின்னும் பல விடத்தும் வருமாயின், அது ‘சொற்பின் வருநிலையணி’ எனப்படும்.

2. முன்வந்த பொருளே பின்னும் பலவிடத்தும் வருமாயின், அது ‘பொருட்பின்வருநிலையணி’ எனப்படும்.

3. முன்வந்த சொல்லும் பொருளும் பின்னம் பலவிடத்தும் வருமாயின், அது ‘சொற் பொருட் பின்வருநிலையணி’ எனப்படும்.

1. சொற்பின்வருநிலையணி

“மால்கரி காத்தளித்த மாலுடைய மாலைசூழ்
மால்வரைத்தோள் ஆதரித்த மாலையார் - மாலிருள்சூழ்
மாலையின் மால்கடல் ஆர்ப்ப மதன்றெடுக்கு
மாலையின் வாளி மலர்.”

இப்பாடலில், ‘மால்’, ‘மாலை’ என்ற முன்வந்த சொற்களே பின்னும் பலவிடத்தும் வந்துள்ளன. எனவே, இது சொற்பின்வரு நிலையணியாகும்.

2. பொருட்பின்வருநிலையணி

அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திகழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை.