பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்127

இப்பாடலில் ‘கொடியார் கொடியார்’. ‘உரியார் உரியார்’, ‘கரியார் கரியார்’ என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் வந்து வேற பொருள் தருகின்றன. எனவே, இப்பாடல் மடக்கணி எனப்படும்.

5. வஞ்சப் புகழ்ச்சி

ஒன்றைனைப் புகழ்ந்தாற் போலப் பழித்துரைத்தலும், பழித்தாற்போலப் புகழ்ந்துரைத்தலும் வஞ்சப் புகழ்ச்சி எனப்படும. இவ் வஞ்சப் புகழ்ச்சி அணி, இலேச அணியின் பாற்படும்.

“இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்டிரள் நோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ”.......
............................................

என்ற இப் பாடற் பகுதி, வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு எடுத்துக் காட்டாகும். இப்பாடல், அஞ்சியின் பொருட்டுத் தொண்டை மானிடம் தூது சென்ற ஒளவையார் பாடியதாகும்.

தொண்டைமானின் படைக்கலங்களைக் கண்ட ஒளவையார், ‘இப் படைக்கலங்கள் மயிற்பீலி அணிந்து மாலை சூட்டப்பெற்றுக் காம்பு திருத்தி நெய் பூசப் பெற்றுப் புதிதாக உள்ளன’ என்று புகழ்வது போலக் கூறிக் குறிப்பாக ‘இப் படைக்கலங்கள் போரிற் பயன்படுத்தப் படவில்லை.’ எனவே, நீயும், உன் வீரரும் போர்ப் பயிற்சி அற்றவர் களாவீர்கள். ஆகவே, அஞ்சியுடன் போர் புரிந்தால் நீ தோற்று விடுவாய்’ என அவன் ஆற்றலைப் பழித்துக் கூறுகின்றார்.

‘அஞ்சியின் படைக்கலங்களோ, பகைவரைக் குத்திக் குத்திக் கங்கும் நுனியும் முறிந்து, பழுது பார்ப்பதற்காகக் கொல்லன் உலைக் களத்தில் உள்ளன’ என்று பழிப்பது போலக் கூறிக் குறிப்பாக ‘அஞ்சியும், அவன் படை வீரரும் அடிக்கடி போர்செய்து பழக்கம் உடையவர்கள். எனவே அவன், உன்னை எளிதாக வென்று விடுவான்’ என அஞ்சியின் ஆற்றலைப் புகழ்ந்து கூறுகின்றார்.