3. விளக்கக் கட்டுரைகள் இவை, படிப்பார்க்குப் பொருள்விளங்க, விளக்கமாக வரையப் படுவதால் விளக்கக்கட்டுரைகள் எனப்படும். அஃதாவது எடுத்துக் கொண்ட பொருளை விளக்கமாக, எளிதில் உணரும் வண்ணம் படைக்கப்படுவதாகும். இவ் விளக்கக் கட்டுரைகள் எண்ணங்களை, கொள்கைகளை வெளிப்படுத்துவன வாகவும் பொதுக் கொள்கைகளைத் தெளிவுப்படுத்துவனவாகவும் அமையும், மேலும், மனிதப் பண்புகளையும், உலகிலுள்ள அனைத்துப் பொருள்களையும் விளக்குவனவாகவும் அமையலாம். இக்கருத்தை உளங்கொண்டு பின்வரும் தலைப்புக்களில் கட்டுரைகள் எழுதிப் பயிலுக. (1) கல்விப்பயன் (2) பண்புடைமை (3) ஒழுக்கமுடைமை (4) நான் அமைச்சரானால்...... (5) நான் ஓர் அறிவியற் புலவனானால் ...... (6) நல்ல நட்பு (7) ஓவியக்கலை (8) உழுதொழில் (9) கொடையுள்ளம் (10) காகிதம் செய்யும் முறை (11) சோப்புச் செய்யும் முறை (12) கவிதையும் கற்பனையும் (13) சிற்பமும் ஓவியமும் (14) உழவனின் தோழன் (15) தமிழர் திருநாள். 4. கருத்தியல் கட்டுரைகள் கருத்தியல் கட்டுரைகளில் கருத்துக்கள் மலிந்திருக்கும். எதுகை மோனை நடைபற்றிக் கருதாமல், பரந்த சொற்கள் நிறைந்து வராமல், வருணனைகள் பெருகித் தோன்றாமல், கருத்துக்களின் கோவையாக அமைதலே கருத்தியல் கட்டுரையாம். இக்கட்டுரையில் கருத்துக்கே முதலிடம் தரப்படும். கற்பனையால் ஒன்றை எண்ணிப் பார்த்து, எழுதுதலும் இதனைச் சாரும். இரு பொருள்பற்றி முரணியும் ஒன்றியும் எழுதி, இறுதியில் முடிவுக்கு வரக்கூடிய விவாதக் கட்டுரையும் இதன் பாற்படும். இவற்றை உளத்தமைத்துத் கீழ்க்காணும் பொருள்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதிப் பழகுக. (1) ‘நன்றி மறப்பது நன்றன்று’ (2) வள்ளுவர் வழியில் நாம் (3) பள்ளி வாழ்வில் மாணவர் (4) மாணவரும் ஆசிரியரும் (5) இராமலிங்கரும் சமயப் பொதுமையும் (6) சிறந்த வாழ்வு அமைவது சிற்றூரிலா? நகரத்திலா? (7) காந்தியடிகளும் உரிமைப் போரும் (8) நாட்டுப் பற்று (9) மொழிப்பற்று (10) திரு.வி.க.வின் |