| 134 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
தமிழ்த் தொண்டு (11) உழைப்பால் உயர்ந்தவர் (12) உழுதொழிலும் பிறதொழிலும் (13) மாணவர் சமுதாயத் தொண்டு (14) ‘முத்து’ - தன் வரலாறு கூறல் (15) நான் வள்ளுவரைக் கண்டால்..... 5. எடுத்தியம்பும் கட்டுரைகள் மனிதர், தம் உள்ளத்திலிருக்கின்ற கருத்துக்களைத் தெளிவாகப் பிறருக்கு எடுத்து மொழிவதே எடுத்தியம்பும் கட்டுரைகளாகும். அவை, பெருங்கதை, நாடகம், திரைப்படம் முதலியவற்றில் படித்த-பார்த்த பகுதிகளை எடுதியம்பு வனவாக அமையலாம். காட்டாக:- சிலப்பதிகாரம், பூலித்தேவன் (நாடகம்) வீரபாண்டியக் கட்டப்பொம்மன். (திரைப்படம்) பேரறிஞர்கள், பெரியோர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி களைக்கூட எடுத்து எழுதலாம். காட்டாக:- பாரதியார், காந்தியடிகள், மறைமலையடிகள், டாக்கடர் உ.வே. சாமிநாதய்யர் போன்றோர் வாழ்கை நிகழ்ச்சிகள். தெருச்சண்டை, மணவிழா, மணிவிழா, திருவிழாப் போன் நிகழ்ச்சிகளில் தாம் கண்ட- உணர்ந்த செய்திகளைச் சுவைபட எழுதலாம். இயற்கையன்னையின் சீற்றமான வெள்ளப்பெருக்கு, பெரு மழை, புயற்காற்று, தீப்பற்றி எரிதல், நிலநடுக்கம் போன்றவற்றையும், எதிர்பாராமல் நிகமும் இடையூறுகளான கலம் கடலில் மூழ்குதல், வானவூர்தி விண்ணில் எரிந்து வீழ்தல் போன்றவற்றையும் எடுத்தி யம்பும் கட்டுரையில் இடம் பெறச் செய்யலாம். தரைச்செலவு, கடற்செலவு பற்றி உண்மையில் தாம் அனுபவித் தவைகளைப் பற்றியும் அல்லது கற்பனையில் தாம் கண்டவற்றைப் பற்றியும் விளக்கி வரையலாம். இவ்வாறு மேற்குறித்த பொருள்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதும்போழ்து, நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்லவேண்டும். வேண்டாத செய்திகளை விலக்கிவிடலாம். பெரியயோர்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வரையும்போழ்து, அவர்களின் பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் குறிப்பிடங் வேண்டும். எடுத்தியம்பும் கட்டுரையைப் படிக்கும் பொழுது, |