பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்135

கட்டுரையில் உள்ளன யாவும் தம்முன் நிகழ்வதுபோல் காட்சி யளித்தல் வேண்டும். இவை யாவையும் நினைவிற்கொண்டு, தொடரும் பத்திலுள்ள பொருள்கள் குறித்துக் கட்டுரைகள் வரைந்து பயிற்சி பெறுக.

(1) நீ விரும்பிக் கேட்ட கதை (2) நீ கூற விரும்பும் கதை (3) நீ விரும்பும் பெரியார் ஒருவரின் வரலாறு (4) நீ மகிழ்ந்த சில நிகழ்ச்சிகள் (5) நீ பார்த்த திருவிழா (6) ஓர் அறிஞருடன் உனக்கு ஏற்பட்ட முதற் சந்திப்பு (7) நீ கண்ட ஒரு தெருத் துன்பநேர்ச்சி
(8) நீ நேரில் கண்ட இயற்கையின் எழுச்சி (9) நீ சிறுவயதில் செய்த அஞ்சா செயல் (10) நீ செய்த கடற் செலவு (11) உனக்குப் பிடித்த பள்ளி நிகழ்ச்கிள் (12) உன் பள்ளி வாழ்வில் குறிப்பிடத் தக்க நிகழ்ச்சிகள் (13) மதுரைச் சித்திரைத் திருவிழா (14) சென்னைப் பொருட்காட்சி (15) உலகத் தமிழ்க் கருத்தரங்கம்.

6. வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரைகள்

ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றிப் புனைந்துரை யாமல் உண்மை வாழ்வை அப்படிnஎழுதுவது தான் வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரையாகும். ஒருவருடை வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றி எழுவதும். இதுளையே சாரும். மேலும், ஒரு பொருளின் வாழ்க்கைகையப் பற்றிக் கூறுதலும் இதனுள் அடங்கம். வாழ்க்கை வரலாறு எழுதுகின்ற போழ்து சட்டசங்களைக் துணையோடு எழுதுல் வேண்டும்.

(1) காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு (2) திரு.வி.க. வாழ்க்கை வரலாறு (3) நாவலர் சோமசந்தர பாரதியார் வாழ்க்கை வரலாறு (4) மறைமலையடிகள் வரலாறு (5) தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்ர் வரலாறு (6) விபுலானந்த அடிகள் வரலாறு (7) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை வரலாறு (8) வ.உ. சிதம்பரனார் வரலாறு (9) பச்சையப் முதலியார் வரலாறு (10) கதிரேசஞ் செட்டியார் வாழ்க்கை வரலாறு (11) பாண்டித்துரைத் தேவர் வாழ்க்கை வரலாறு (12) பாரதியார் வாழ்க்கை வரலாறு (13) பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு (14) நேருவின் வாழ்க்கை வரலாறு (15) கென்னடியின் வாழ்க்கை வரலாறு.