பக்கம் எண் :

136கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

7. நடைமுறைச் சமுதாயவியல் - பொருளியல் கல்வியியல் கட்டுரைகள்

(அ) நடைமுறைச் சமுதாயவியல் கட்டுரைகள்

மனிதர்களின் கூட்டமே சமுதாயமாகும். அச் சமுதாயம் பல செயல்களை உள்ளிட்டது. சமுதாயத்தின் தேவைகள் யாவை? அவற்றைப் பெற எவ்வாறு முயல வேண்டும்? என்பன பற்றியும், சமுதாயத்தில் அமைந்து கிடக்கும் உயர்வு தாழ்வு பற்றியும், ஏழை பணக்கார வாழ்வு பற்றியும் அறிந்து, அவற்றின் உண்மை நிலைகளை ஆய்ந்து எழுதுவது இக்கட்டுரையின் பாற்படும். மேலும், சமுதாயத்தில் பெண்கள் நிலைமை குறித்தும், பெண்ணடிமை, கைம்மை, குழந்தை மணம் முதலியன பற்றியும் எழுதுவதும் இத்தலைப்புடைய கட்டுரை களின் கீழ் அடங்கும்.

நம்முடைய சமுதாயம் முன்னேற வழிவகை கண்டு உழைத்த சான்றோர் பலர். அவருள் இராசாராம் மோகனர், பாரதியார், காந்தியடிகள், விவேகானந்தர், இராமலிங்க அடிகள் போன்றோர் எழுத்தாலும், பேச்சாலும், செயலாலும் தொண்டாற்றினர். அவர்கள் இயற்றிய நூல்களைப் பயின்று குறிப்புக்களைத் திரட்டிக் கீழ்க் காணும் தலைப்புக்கள் குறித்துக் கட்டுரைகள் வரைந்து பழகுக.

(1)சமுதாயத்தில் நம் கடமை (2) சமுதாயமும் சமயமும்
(3) சமுதாயத்தின் பெண்கள் நிலை (4) தன்னலமும பொதுநலமும் (5) நம் இந்தியச் சமுதாயநிலை (6) மங்கையர் முன்னேற்றம்
(7) வாழ்வு வளம் பெற.... (8) நாடு வாழ வேண்டுவன (9) இராமலிங்கரும் சமயப் பொதுமையும் (10) தாயுமானவன் வேண்டும் சமய வாழ்க்கை (11) ஆங்கிலச் சமுதாயக்திற்கும் இந்தியச் சமுதாயத்திற்கம் உள்ள வேறுபாடுகள் (12) பொருளாதார நிலையும் மக்கள் வாழ்வும் (13)மாணவர் நிலை (14) மெய்கண்டார் வகுத்த வழிகள் (15) சமயப் பெரியார்களும் சமுதாய வாழ்வும்.

(ஆ) நடைமுறைப் பொருளியல் கட்டுரைகள்

பொருளற்றவரைப் பொருளாகச் செய்யும் பொருள் சமுதாயத்தில் முதலிடம் பெறுகிறது. அப்பொருள் வரும் வழிகளையும், பெருக்கும் முறைகளையும், சேர்த்து வைக்கும் முறைகளையும், செலவிடும் முறைகளையும் அறிந்து பொருளாதாரத் தொடர்பான நாணயமாற்று,