வங்கிகள், பயிர்த்தொழில், வாணிகம், கைத்தொழில், கூட்டுறவுச் சங்கம் போன்றவற்றைப்பற்றி எழுதுவது பொருளியல் கட்டுரை களாகும். சுருங்கக்கூறின் பொருளாதாரத் தலைப்புகள் குறித்து எழுதுதல் இதன் பாற்படும். (இ) நடைமுறைக் கல்வியில் கட்டுரைகள் கேடில் விழுச் செல்வமாகிய கல்வி மனித இனத்தின் பிறப்புரி மையாக அமைந்துவிட்டது. அக் கல்வி, கிராமக் கல்வி, முதியோர் கல்வி, தொழிற் கல்வி, பொதுக் கல்வி, சமயக் கல்வி, ஒழுக்கக் கல்வி எனப் பலதிறத்தனவாம். இவ்வாறு நடைமுறையில் அமைந்துள்ள கல்வியைப் பற்றி எழுதுதல் இத்தலைப்பின் கீழ் அடங்கும். தொடரும் பத்தியிலுள்ள பொருள்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதிப் பழகுக. (1) முதியோர் கல்வி (2) சிறுவர் கல்வி (3) உயர் நிலைக் கல்வி (4) கல்லூரிக் கல்வி (5) தொழிற் கல்வி (6) கிராமக் கல்வி (7) தொடக்க நிலைக் கல்வி (8) இன்றையக் கல்வி முறை (9) அறிவியற் கல்வி (10) கல்வித்திட்டத்தில் வேண்டப்படுவன (11) தொழில்மூலம் கல்வி (12) கல்வியும் கல்விக் கழகங்களும் (13) ஒழுக்கக் கல்வி (14) வானொலியும் சல்வியும் (15) திரைப் படமும் கல்வியும் (16) நாடகமும் கல்வியும் (17) பொருட்காட்சியும் கல்வியும். 8. பிறர் சொற்பொழிவுகளைக் கேட்டுக் குறிப்பெடுதல் சொற்பொழிவைக் கேட்கின்ற பொழுது மிகக் கவனமாய் இருத்தல் வேண்டும். கேள்விப்புலமும், மனமும் ஒருமையாய் இயங்குதல் வேண்டும். சொற்பொழிவைக் கேட்டுக் குறிப் பெடுத்துப் பழகப் பல அறிஞர்களுடைய சொற்பொழிவு களைக் கேட்க வேண்டும். குறிப்புக்களைக் கொண்டே கட்டுரை வரையலாம். குறிப்பெடுகின்ற பொழுது, இன்றியமையாக் கருத்துக்களைப் குறித்துக்கொளல் வேண்டும். பிறகு அவற்றைப் பத்தித் தலைப்புக் களாக்கி எழுதுதல் வேண்டும். காட்டாக் 14-2-’57 இல் சத்தியமங்கலம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில், முன்னாள் பொதுக்கல்வி இயக்குநர் திரு.நெ.து. சுந்தரவடிவேல் எம்.ஏ.இ எல்.டி. ஆவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவின் குறிப்புக்கள். |