பக்கம் எண் :

138கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

முன்னுரை-சரிநிகர் சமானமாக வாழ்தல்-மாணவர் களிடையே போட்டி வேண்டும் - வெற்றியும் வெறியும் - நெற்பயிரும் நல்வாழ்வும் - அரசியலாரின் பங்கம் நம் கடமையும் - உடலுக்குச் சோறு, உயிருக்குக் கல்வி - பல கல்வி - உள்ளத்தில் உறுதி - கல்விப் பயன் - பசியே வெறுப்புக்கும் பொறாமைக்கம் வித்து பசிப்பிணி மருத்துவர்கள் பெருகுக - முடிவுரை.

இச்சொற்பொழிவுக் குறிப்பைக் கட்டுரையாக எழுதும் பொழுது, ஒவ்வொரு தொடரையும் கட்டுரைத் தலைப்பாக்கிக் கேட்டதை உளத்தமைத்து வேண்டிய செய்திகளைத் தொகுத்து எழுதுதல் வேண்டும். எழுதுகின்ற கட்டுரைக்குத் தலைப்பிட்டு எழுதுதல் வேண்டும், இங்கே, கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற் பொழிவுக் குறிப்புக்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு கட்டுரை எழுதிப் பழகுக.

உரை வேந்தர் ஒளவை திரு.சு. துரைசாமிப்பிள்ளை 9-2-’52 இல் நடந்த பத்துப்பாட்டு மாநாட்டில் திருமுருகாற்றுப் படை பற்றி ஆற்றிய சொற்பொழிகள் குறிப்புக்கள்.

தோற்றுவாய் - ஆற்றுப்படை விளக்கம் - முருகாற்றுப் படையின் சிறப்பு நிலை - முருகாற்றுப்படையின் கருப்பொருள் - பரிசில் விளக்கம் - முருகனுடைய திருப்பதிகள் - வழிபாடுகள் - காந்தட் கண்ணி - கூதளங் கண்ணி - உருள் பூந்தார் - வண்டு சூழ்ந் தொலிக்கம் சுனை மலைர் - பேய் மகள் துணங்கை - உடை - கடல்-கணவீரம் - களிறு -ஆகம்- ஆசினி - ஆமா - இறாள் - உளியம் - முடிப்புரை.

9. பிறர் வானொலிப் பேச்சைக் கேட்டுக் குறிப்புகள் எடுத்தல்

செல்வத்துட் செல்வமான செவிச் செல்வத்தை வானொலியில் கேட்டுச் சுவைக்கலாம். வானொலியிற் பேசப்படும் பேச்சைக் குறிப்பெடுத்துப் பழகுதல் வேண்டும்.

கவிஞர். திரு. முடியரசனார் திருச்சி வானொலியில் பாவேந்தர் நினைவு நாள் குறித்து. 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாள் பேசிய பேச்சின் குறிப்புக்களைக் கீழே காண்க.

முன்னரை-இலக்கிய உலகில் மறுமலர்ச்சி - பாரதியும் பாரதி தாசனும் - கவிஞனின் இயல்பு - சமுதாயத்தில் கவிஞனின் இடம் -