பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்139

பாரதிதாசனின் பாநலம் - அழகின் சிரிப்பு - குடும்ப விளக்க - மெய்பபாடு - குழந்தையும் குடும்பக் கட்டுப்பாடும் - கவிஞரின் ஆசை - பாரதிதாசனும் தமிழும் - மாகவி - ஞாயிறு எழுக - முடிவுரை.

இவ்வாறு வானொலிச் சொற்பொழிவைக் கேட்டுப் குறிப் பெடுத்துப் பழகுதல் வேண்டும். எடுத்த குறிப்புக்களைக் கொண்டே கட்டுரை எழுதத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு தொடரைiம் சிறு தலைப்பாகக் கொண்டு கட்டுரையை அமைத்தல் வேண்டும். இன்றியமையாச் செய்திகள் யாவும் கட்டுரையில் இடம் பெறல் வேண்டும. மாணவர்கள் நல்ல வானொலிச் சொற்பொழிவுகளைத் தவறாது கேட்டுக் குறிப்பெடுத்தல் நல்லது. பிறகு அவற்றைக் கட்டுரை வடிவமாக்கித் தங்கள் எழுத்தாற்றலை வளர்த்துக்கொளல் வேண்டும்.

10. வானொலிப் பேச்சக் குறிப்புக்களைப் பின் விரித்து எழுதுதல்

கடந்த வகுப்பின் குறிப்புக்களைக் கொண்டு விரித் தெழுதப் பழகியிருப்பீர்கள். சென்ற கட்டுரையில் வானொலிப் பேச்சின் சுருக்கக் குறிப்புக்களைக் கண்டோம். அச்சொற் பொழிவுச் சுருக்கக் குறிப்புக்களை விரித்தெழுதப் பழகிக் கொளல் வேண்டும். கவிஞர் முடியரசனார் வானொலியில் பேசிய சொற்பொழிவுச் சுருக்கத்தைக் கீழே விரித்தெழுதி யுள்ளேன். அதனைக் காட்டாகக் கொண்டு குறிப்புக்களை விரித்தெழுதக் கற்றுக்கொள்க.

குறிப்பின் விரிவு

முன்னுரை: இலக்கிய உலகின் மறுமலர்ச்சிக்கு இராமலிங் கடிகள், தாயுமானவர், அருட்பிரகாசர் முதலியோரை வழியாட்டி யோராகக் கொள்ளலாம் - இவர்கள் சமய நோக்குடையராயினும், சீர்திருத்ததக் கருத்துடையவர்கள். அவ் வழியைக் கவிஞர் பாரதியும், பாரதிதாசனும் பின்பற்றினர்.

பொருள்: பாரதியும், பாரதிதாசனும் - விடிவெள்ளி, உதய ஞாயிறு - பேரருவி, பேராறு - வித்து, ஆலமரம், கவிஞன் துணிவு மனப்பான்மை உடையவன் - எதற்கும் எவர்க்கம் அஞ்சாத நெஞ்ச - தன்னலமும், பொதுநலமும் - பல உள்ளங்கள்.

பலவித மறுமலர்ச்சி - சொற் சிக்கனம், உணர்ச்சி வேகம், தனிப்பாணி - எண்சீர் விருத்தத்திற்கு ஒரு தனி நடை - அழகின்