பக்கம் எண் :

140கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

சிரிப்பு - குடும்ப விளக்கு - தனி மனிதனும பொதுமக்களும் - சோம்பிக் கிடப்பவனிடம் பாரதிதாசன் - மலையும் கவிஞரும் - காதலும் கருத்தடையும் - தமிழியக்கம் - தாய்மொழி வளர்ச்சி - கவிஞரின் குணநலன்கள் - பாடல்களில் தென்றல், புயல், குயில், சிங்கம், வெண்ணிலவு, செங்கதிர், இனிப்பு, கசப்பு, தன்மை, வெம்மை.

முடிவுரை: இருளால் ஞாயிறு மறைக்கப்படுவதில்லை - இருள் அகலட்டும் - ஞாயிற்றின் ஒளி பரவட்டும் - கவிஞர் வாழ்க!

11.கொடுத்த தலைப்புக்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதுதல்

கொடுத்த தலைப்புக் குறித்துக் கட்டுரை எழுதப்புகும் மாணவர்கள், அத் தலைப்பிற்கு வேண்டிய செய்திகளை நூல்கள் வாயிலாகத் திரட்டுதல் வேண்டும். பனுவல்களில் படித்த செய்தி களைக் குறிப்பெடுத்து வைத்துக் கொளல் வேண்டும். கட்டுரையை எவ்வாறு அமைக்கலாம் எனச் சிந்தித்து, மனத்தில் கட்டுரைக்கு ஒரு முன் வடிவம் கொடுக்கப்படல் வேண்டும். பிறகு, அவ் வடிவை எழுதிவைத்துக்கொண்டு கட்டுரையை எழுதத் தொடங்க வேண்டும்.

ஒரு பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத. வேண்டு மென்றால் - அப் பெரியாருடைய பிறப்பு இளமை வாழ்வு, கல்வி, தொண்டு, இல்வாழ்வு, செயற்கருஞ்செயல்கள் முதலியனவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தொகுத்து வரைதல் வேண்டும்.

முன் வகுப்புக்களில் நீங்கள், கொடுத்த தலைப்புக் குறித்துக் கட்டுரை எழுதப் பழக்குவிக்கப்பட்டிருக்கிறீர்கள். அதனை நினைவிற் கொண்டு பின்வரும் தலைப்புக்கள் குறித்துக் கட்டுரைகள் வரைந்து காட்டுக.

1.அறிவுடையாரெல்லாம் உடையார்.

2.மாணவர் கடமை.

3.ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.

4.ஈதல் இசைபட வாழ்தல்...

5.‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’.

6.‘தந்தை தாய்பே பேண்’.