146 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
விளையாடும் சிறுவனைப்போல அக்காட்சியிருக்கும். விண்மீன்கள் புடைசூழத் திகழ்ந்து வரும் வெண்ணிலவு, படைவீரர் சூழ்ந்துவரப் பவனி வரும் அரசனெனத் தோற்றமளிக்கும். மாணவர்களிடையே நின்று அறிவுரை பயிற்றும் எங்கள் ஆசிரியர் போலவும் காணப்படும், அந்த மீன்களிடையே விளங்கும் வெண்மதி. இந்த அழகுக் காட்சியை எங்கள் மாடியிலிருந்து நாங்கள் அடிக்கடி கண்டு களிப்பதுண்டு. பிறை நிலவு: சில மாலை நேரங்களிற் பிறை நிலவும், அதற்கு மேலே ஒன்றை விண்மீனும் காணப்படும். அந்த அழகே அழகு. நாங்கள் காகிதத்தால் செய்து விடும் கப்பல் போல அந்தப் பிறை மிதக்கும். என் தாய் அங்காடியிலிருந்து வாங்கிவரும் வெள்ளைப் பூசனிக் கீற்றுப் போல அந்தப் பிறை நிலா விளங்குவதும் உண்டு. அப்போது எங்களுக்கே கற்பனை யூறும்; கவிதை எழுதத் தோன்றும்; கவிஞர்கள் எழுதிய கவிதைகள் பல எம் நினைவிற்கு வரும். நிலாவுணர்த்தும் உண்மை: இந்தநிலா எப்பொழுதும் முழுமையாகவே யிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் ,அப்படியிருப் பதில்லையே; தேய்கிறது - வளர்கிறது. மீண்டும் மீண்டும் இப்படியே மாறி மாறி வருகிறது. அப்படி மாறி மாறி வரினும் ஒருண்மையை நமக்குச் சொல்லிக்கெண்டே யிருக்கிறது. உலகத்தில் தோன்றிய பொருள் வளர்வதும் தேய்வதும் இயற்கை என்னும் பேருண்மையை உணர்த்து கிறதல்லவா? பெரியவர்களுடைய நட்பு, பிறை நிலவுபோல வளர்ந்து வரும் என்பதையும், சிறியவர்களுடைய நட்பு முழுமதி போலத் தோன்றிப் பிறகு குறைத்துகொண்டே வரும் என்பதையும் நமக்கு அந்த நிலவுதானே உணர்த்துகிறது. முடிவுரை: மாணவர்களாகிய நாம் இதுபோன்ற இயற்கை இன்பங் களில் திளைத்து மகிழப் பழகுதல் வேண்டும். அப்படி மகிழப் பழகுதல் வேண்டும். அப்படி மகிழ்ந்து, இன்பம் நுகர்வதோடு அமையாது, பல நீதிகளையும் உண்மைகளையும் கற்றுக்கொண்டு நம் வாழ்வைச் செம்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். |