வோட்டம் தங்கு தடையின்றி எல்லையிறந்து போவதுதான் கற்பனையின் உச்சநிலையாகும். மாணவர்கள் தங்கள் எண்ணங் களை ஒருவழிச் செலுத்தி உரிய பொருள் குறித்தோ, நிலை குறித்தோ எழுதிப் பழகல் வேண்டும். கற்பனைக் கட்டுரைக்குக் காட்டாக அறிஞர் மு.வ. வின் கி.பி. இரண்டாயிரம் என்ற நூலப் பயின்று பார்க்க. கற்பனையாற் றலை மாணவப் பருவத்திலேயே வளர்த்துக்கொளல் நலம். ஈண்டு ‘நிலவுக் காட்சி’ குறித்து எழுதிய கற்பனைக் கட்டுரையின் ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது. இதனைக் காட்டாகக் கொண்டு பல கற்பனைக் கட்டுரைகள் எழுதிப் பழகுக. நிலவுக் காட்சி (கற்பனைக் கட்டுரை) வானத்து விளக்கு: அந்தி மயங்கி இருள் சூழும் நேரம். என் தாய், வீட்டில் விளக்கேற்றி வைக்கின்றாள். அப்பொழுது உலகத்தை ஒருள் விழுங்காவண்ணம், இயற்கைத் தாய் ஓர் ஒளி விளக்கை வானத்திலே ஏற்றி வைக்கின்றாள். வீட்டில் விளக்கேற்றிய வுடன் குழந்தைகள் மகிழ்ந்து விளையாடுவதைப்போல், வானத்து விளக்கைக் கண்டவுடன் உலக மக்கள் மகிழ்ந்து களிக்கின்றனர். அந்த விளக்கு ஏழை என்றும் செல்வரென்றும், உயர்ந்தவரென்றும் தாழ்ந்தவரென்றும் வேறுபாடு கருதாது ஒரு நிகராக ஒளியைத் தருகின்றது. முழுநிலாக் காலங்களில் வானகமும் வையகமும் ஒரே ஒளி மயமாகக் காட்சி தருவது பேரின்மாக இருக்கும். மலைகள், மரங்கள், பயிர் பச்சைகள், வீடுகள் அனைத்தும் வெள்ளைவெளேர் என்று காட்சி நல்கும். உலகத்தையே ஒளிமயமாக்கும் இந்த நிலவினிடம், களங்கம் இருக்கின்றது என்றும் உலகம் சொல்லத்தான் செய்கின்றது. உயர்ந்த வர்களிடம் சிறு களங்கம் தோன்றினாலும், அஃது உலக முழுதும் பரவும் போலும்! அழகு நிலா: சில வேளைகளில் கருமுகில்கள் கூட்டமாக விரையும். அவை நிலவைக் கடந்து செல்லும்பொழுது, நிலவு அந்த முகில்களினூடே நுழைந்து வெளிப்படுவது போன்று காணப்படும். சில சமயங்களில் அம்முகிலுக்குள் மங்கியதோர் நிலவாகக் காணப்படும். ஒளிந்து |