144 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
2. அரசாங்கக் கல்லூரி முதல்வருக்குப் புகுமுக வகுப்பில் சேர, விண்ணப்பத்தாள் அனுப்புமாறு வேண்டி எழுதுக. 3. கல்வி அமைச்சரைப் பள்ளி இலக்கியக் கழகவிழாவிற்குத் தலைமை தாங்குமாறு வேண்டி எழுதுக. 4. வருமான வரி அலுவலகத்தில் வேலை வேண்டித்தலைமை அலுவலருக்கு விண்ணப்பம் ஒன்று எழுதுக. 5. அரசு வங்கியில் வேலை வேண்டி வங்கி இயக்குநருக்க விண்ணப்பம் வரைக. 6. வேலை தேடித்தரும் அலுவலகத்திற்கு உன்தகுதி, நிலை குறிப்பிட்டு வேலை வேண்டி விண்ணப்பம் எழுதுக. 7. பொதுப் பணித் துறைத் தலைப் பொறியாளருக்கு மேற் பார்வையாளர் வேலை வேண்டி விண்ணப்பம் வரைக. (ஆ) ஊராட்சி, நகராட்சிக் கழகங்களுக்கு எழுதுதல் தன்னுடைய ஊருக்கு , நகரத்திற்குத் தேவையான நீர், விளக்கு, சாலை, துப்பரவு முதலியன வேண்டி, ஊராட்சி, நகராட்சிக் கழகங்களுக்கு விண்ணப்பம் எழுதிப் பழகுதல் வேண்டும். கீழ்க் கண்ட விண்ணப்பங்களை எழுதிப் பயிற்சி பெறுக. 1. இராமநாதபுர மாவட்டத்திலுள்ள குன்றக்குடிக்கு,, அரசுக் கிளை நூலகம் வேண்டி ஊராட்சி ஒன்றிப்பு ஆணையாளருக்கு விண்ணப்பம் ஒன்று வரைக. 2. திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த சித்தன்ன வாசலில், தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகக் கிளையை நிறுவுமாறு, ஊராட்சி ஒன்றிப்பு ஆணையாளருக்கு விண்ணப்பம் எழுதுக. 3. மதுரை மாவட்டத்தைச் சார்ந்த மேலூரில் மாணவர் விடுதி எழுப்ப, அப்பகுதி ஊராட்சி ஒன்றிப்புத் தலைவருக்கு விண்ணப்பம் ஒன்று வரைக. 4. காரைக்குடி நகராட்சி மன்றத்திற்குப் புதுத்தெருவில் குடிநீர் வசதி வேண்டுமெனக் கேட்டு விண்ணப்பம் எழுதுக. 5. மதுரை நகராட்சி மன்றத்திற்கு, மேலமாசி வீதியில் ஒரு படிப்பகம் அமைக்க வேண்டுமெனக் கேட்டு விண்ணப்பம் எழுதுக. 6. திருச்சி நகராட்சி மன்றத்திற்குத் தில்லை நகரில் இரண்டாவது குறுக்குச் சாலையை ஒழுங்காக அமைத்தல் தருமாறு விண்ணப்பம் ஒன்று வரைக. 7. சென்னை மாநகராட்சி மன்றத்திற்குச் சைதாப் பேட்டையில் ஒரு மகப்பேறு நிலையம் வைக்குமாறு வேண்டி விண்ணப்பம் வரைக. 15. கற்பனைக் கட்டுரைகள் சிந்தனை ஈனும் சிறந்த குழவியே கற்பனையாகும். கற்பனை இருவகைப்படும். உள்ளதையே உயர்வு நவிற்சிபடப் புனைந் துரைப்பது ஒருவகை. இல்லாத தொன்றைப் படைத்துக் காட்டுவது மற்றொருவகை, அறிவியல் கண்டுபிடிப்புக்களெல்லாம் ஒரு வகைக் கற்பனையால் விளைந்த பயன்களேயாம். எண்ண |