பக்கம் எண் :

148கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

கீழ்க்காணும் உரையாடலைக் காட்டாகக் கொண்டு பல உரையாடல்களைப் பேசியும், எழுதியும் பழகுக.

திரைப்படத்தால் விளைவது நன்மையா? தீமையா?

செயலாளர் : எழுத்தறிவிக்கும் இறைவர்களே என் அன்பிற் குரிய நண்பர்களே, உங்களனைவர்க்கும் முதற்கண் என் வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். இன்று நிகழவிருக்கும் நம் மன்றத்தின் சொற்போர் அரங்கிற்கு நடுவராயிருந்து சிறப்புற நடாத்தித் தருமாறு, பேராசிரியர் திரு. நெடுமாறன் எம்.ஏ., அவர்களை மாணவர் மன்றத்தின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்.

தலைவர் முன்னுரை: பள்ளித் தலைவரவர்களே! பயிற்று விக்கும் ஆசிரிய நண்பர்களே! மாண்புடை மாணவர்களே! எல்லீர்க்கும் என் அன்பு கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்கின்றேன். இன்று, உங்கள் சொற்போர் அரங்கிற்கு யான் நடுவராய் வீற்றிருப் பதைக் குறித்துப் பெரிதும் மகிழ்கிறேன். திரைப்படத்தால் விளைவது நன்மையா? தீமையா? எனச் சிலர் எடுத்தியம் இருக்கின்றனர்; உங்களைப் போலவே நானும் அவர்தம் சொல்லாற்றலைக் கேட்டு மகிழ விழைகின்றேன். இப்பொருள்பற்றி முதற்கண் நான் ஒன்றுங் கூறதிருப்பதே முறை. அதனால், மாணவர்களைப் பேசுமாறு அழைக்கின்றேன். முதலில் திரு. அறிவுடை நம்பி, திரைப்படத்தால் விளைவது நன்மையே என்று சொற்போரைத் தொடங்கி வைப் பாராக.

அறிவுடை நம்பி: ஒரு பாற்கோடா உயர் பெருந்தகை யாகிய நடுவர் அவர்களே! அறிவு நல்கும் ஆன்றோரே! மாற்றுக் கட்சி நண்பர்களே! அன்புத் தோழர்களே! அனைவரையும் தலைதாழ்த்தி வணங்குகிறேன். சின்னாட்களுக்கு முன்னர் நம் பள்ளியில் காட்டப் பெற்ற படக்காட்சியைக் காண நாம் அனைவரும் கூடியிருந்தோம். தீமையெனப் பேச முன்வந்துள்ள நண்பர்களும் அன்று முன் வரிசையில் அமர்ந்து கண்டு களித்தமையும் குறிப்பிடத்தக்கது., (கைதட்டல்). திரைப்படக் காட்சிகளைக் கண்ணாரக் கண்டும், உரையாடல்களையும், பாடல்களையும் செவியாரக் கேட்டும் சிந்தைகளிகூரும் நிலையை அடைகின்றோம். ஆகவே, கட்புலனுக்கும் செவிப்புலனுக்கும் ஒருசேர இன்பம் உண்டாக்குகிறது திரைப் படம் என்பதை உணர்கின்றோம். பள்ளிகளில் படக்காட்சியும் ஒரு