பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்149

பாடப் பகுதியாகச் சேர்க்கப்பட்டிருப்பதிலிருந்தே, அதனால் விளையும் நன்மைகளைத் தெற்றென உணர்கின்றோம். கற்றவர் மட்டுமே புத்தகங்களைப் படித்துணர முடியும்; சிலர் மட்டுமே சொற் பொழிவைக் கேட்டு மகிழ முடியும்; இசையும் அவ்வாறே. ஆனால், திரைப்படத்தைக் கூறியிருந்து ஒரே நேரத்திற் கண்டுகளிக்க வாய்ப்புண்டு! புத்தகம் ஒருவரால் எழுதப்படுவது; சொற்பொழிவு ஒருவரால் நிகழ்த்தப்பெறுவது; இசை ஒருவரால் இசைக்கப் பெறுவது; திரைப்படக் கலையோ பலருடைய அறிவால், கூட்டுற வால் உருவாவது. ஆதலின் பலருடைய அறிவாற்றலையும் ஒருங்கே பெற்று மகிழத் திரையரங்கு துணைபுரிந்து; பொழுதை நன்முறை யிற் கழிக்கப் பேருதவி செய்கின்றது. மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய செய்திகளைப் படக்காட்சிகளின் வாயிலாகத் தெளி வாகவும் எளிதாகவும் அறிந்து கொள்ள முடியும். மாணவர்களுக்கு மட்டுமன்று பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. திரைப் படத்தைப் ‘பொதுமக்கள் புத்தகம்’ என்றே கூறலாம். நேரிற் சென்று காண வியலாப் பொருள்களை, இடங்களைப் படக்காட்சிகளின் வாயிலாகக் கண்டு பயன் பெறமுடியும். அயல் நாட்டுப் பழக்கவழக்கங் களையும் நிகழ்ச்சிகளையும் அறிந்துகொள்ள அது வாய்ப்பளிக்கிறது. இவ்வாறு, திரைப்படம் பல்லாற்றானும் நன்மையே விளைத்து வருகிறது என்பது வெள்ளிடைமலை என மொழிந்து விடைபெறு கிறேன்; வணக்கம்.

ஆராவமுதன்: சமன் செய்து சீர் தூக்கும் நடுவர் அவர்களே! அறிவூட்டும் பரம்பரையினரே! உடன் பயில்வோரே! அனைவர்க்கும் என் வணக்கம். நன்மை எனப் பேசிய நண்பர், தமக்கே உரிய முறையில், உங்கள் மனத்தை ஈர்க்கச் சொல்வலை வீசினார். ஆனால் மாணவர் நிலைசாயவில்லை. திரைப்படத்தால் விளைவது தீமையே என அழுத்தமாகவும் திருத்தமாகவும் நான் கூறவிரும்புகிறேன். நன்மை எனப் பேசியவர் பள்ளியிற் காட்டப் படும் கல்விப் படக் காட்சிகையக் கூறுகிறரா? அரங்குகளில் காட்டப்படும் கதை தழுவிய காட்சியைக் கூறுகிறர்ரா? என்பதே புரியவில்லை. இரண்டை யுமே குழப்புகிறார். (கைதட்டல்). இரு புலனுக்கு நன்மை தருகிறது என்றும் குறிப்பிட்டார். இது தவறு. இளஞ் சிறாரும் இன்று மூக்குக் கண்ணாடி போடுகின்ற நிலைக்கு வந்துவிட்டநிலை எதனால் வந்தது? திரைப்படத் தாலன்றோ? நண்பர் கண்ணாடி போட்டிருக்