4.கொடுத்துவந்தான்: கொடுத்து வந்தான் கொடுத்து உவந்தான் 5.என்பரவாமை: என் பரவாமை என்பு அரவு ஆமை 6.மணந்துவக்குங்காலம்: மணம் துவக்கும் காலம் மணந்து உவக்கும் காலம் 7.தலை விதிவசம்: தலைவி திவசம் தலை விதி வசம் 8.புத்தியில்லாதவன் புத்தியில் ஆதவன் புத்தி இல்லாதவன் 9.எங்கணேசா: எம் கணேசா எங்கள் நேசா இவ்வாறு வரும் தொடர்களை எப்பொருள்பட வேண்டு மென்று விரும்புகின்றோமோ, அதற்கேற்பப்பிரித்து எழுதுதல் வேண்டும். இன்றேல் கற்பார் மனம் வெறுப்புற நேரிடும். ஆகவே, பொருள் தெளிவும், நடையழகும், தோற்றப் பொலிவும் உண்டாகுமாறு, எழுத்துக்களையும் சொற்களையும், தொடர்களையும், பத்திகளையும் தக்க அளவு இடம்விட்டு எழுதுவதோடு, உரிய குறியீடுகளையும் பயன்படுத்தி மாணாக்கர் கட்டுரையை அணி செய்வாராக. |