பக்கம் எண் :

184கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

“அன்புவிரைந்து பெரும் வாய்ப்புமக்கட்பிறவிக்குண்டு அதனால் பிறவி விழுமிய தென்றான்றோராற் போற்றப்பெற்றது மக்கட் பிறவி விழுமியதேயெப் பொழுதப் பிறவி தன் மாட்டுக் கெழுமியுள்ள அன்பு வளர்ச்சிக்குரிய வாய்ப்பைநன் முறையிற் பயன்படுத்தினாலது விழுமிய தாகுமில்லையேல் துவிழுமியதாகது.”

இப்பத்தி இடம் விட்டும், குறியீடுகள் காட்டியும் பொருள் விளங்க எழுதாததால், கற்பார்க்கு மருட்சி ஏற்படுகிறது. இதையே கீழுள்ளவாறு எழுதினால் பொருள் தெளிவு பிறப்ப தோடு, அழகு படவும் அமைகிறது.

“அன்பு விரைந்து பெருகும் வாய்ப்பு மக்கட் பிறவிக்கு உண்டு. அதனால், அப்பிறவி விழுமிய தென்று ஆன்றோரால் போற்றப் பெற்றது. மக்கட் பிறவி விழுமியதே; எப்பொருது? அப்பிறவி தன் மாட்டுக் கெழுமியுள்ள அன்பு வளர்ச்சிக்குரிய வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தினால், அது விழுமியதாகும். இல்லையேல், அது விழுமியதாகாது.”

14. சொற்களை இடம்விட்டு எழுதுதலும்
சேர்த்து எழுதுதலும்

இருபொருள் தந்து நிற்கும் சொற்றொடர்களை நாம் எந்தப் பொருளில் பயன்படுத்துகிறோமோ - அதற்கேற்ப இடம்விட்டு எழுதுதல் வேண்டும். அவ்வாறின்றிச் சேர்த்தே எழுதினால் பொருள் கவர்பட்டு மயங்க நேரிடும். இருபொருள் பட வரும் தொடர்கள் சிலவற்றை நோக்குக.

1.குன்றேறமா:

   குன்று ஏறா மா
குன்று ஏறு ஆமா

2.செம்பொன்பதின்றொடி:

செம்பொன் பதின் தொடி
செம்பு ஒன்பதின் தொடி

   3.மாதேவா:

   மாதே வா
மா தேவா