பக்கம் எண் :

230கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

எழுதினார்; திக்கெட்டும் மக்கள் சினந்தெழ வேண்டிய இன்றியமையாமையை எடுத்தியம்பினார்

ஆங்கில ஆட்சி அதனைக் கண்டு அஞ்சியது; மக்களின் விழிப்புணர்ச்சி கண்டு கலங்கியது. ஆங்கிலேயரின் சீற்கணை ‘இந்தியர்’மீது பாய்ந்தது. அவ்விதழின் உரிமையாளர் திருமலாச் சாரியார் சிறைசெய்யப்பட்டார். அவ்விதழும் தடை செய்யப் பட்டது.

பாரதியாரைச் சிறைசெய்யும் ஆணைபிறப் பித்தது ஆங்கில அரசு. உடனே நண்பர்கள் பலரும் நாட்டுத் தலைவர் சிலரும் பாரதியாரைப் புதுச்சேரிக்குச் செல்லுமாறு வற்புறுத்தினர். சிறையில் சிதம்பரனார் கூறியதும் பாரதிhயர் நினைவுக்கு வரவே, அவர் நண்பர்களின் வேண்டுகோளின்படி புதுச்சேரிக்குப் பயணமானார்

இ. புதுவை வாழ்வு

புதுவை நகர்

புதுச்சேரி என்பதனைப் புதுவை என்றும் சுருக்கமாக அழைப்பர். அந்நாளில் புதுச்சேரியை ஆண்டு வாழ் மக்கள் அனைவரும் தமிழர்களே. அவர் பேசும்மொழியும் தமிழே. ஆனால், அங்குப் பிரஞ்சுக்
காரர் ஆட்சி நடைபெற்று வந்ததனால் ஆட்சி மொழியாகப் பிரஞ்சு மொழியும் இருந்தது. ஆங்கிலேயரின் அதிகாரம் புதுவைக்குள் புக முடியாது. பிரஞ்சு அரசின் இசைவு இல்லாமல் ஆங்கிலேயர் புதுவைக்குள் எதுவும் செய்யமுடியாது. அது போலவே ஆங்கிலேயரின் ஆட்சிப் பகுதியில் பிரஞ்சு ஆணை செல்லாது அதனை உணர்ந்த சிலர் ஆங்கில ஆட்சியின் கொடுமைக்கு ஆளாகாமல் புதுவையைப் புகலிடமாகக் கொண்டனர்.

குவளைக்` கண்ணன் உதவி

பாரதியார் புதுவைக்குப் போனவரல்லர். எங்குப் போய்த் தங்குவது? யாரைக் காண்பது? என்றெல்லாம் பாரதியார் எண்ணித் தயங்கினார். அந் நேரத்தில் உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களையக் குவளைக் கண்ணன் என்பார் முன்வந்தார். அவர் தம் உறவினர் குப்புசாமி ஐயங்கார் முகவரிக்குக் கடிதம்