பக்கம் எண் :

244கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

மணம் வீசத் தொடங்கின. சமுதாயத்திலே நிலவி வந்த குருட்டு நம்பிக்கைகளை இவர் தாக்கினார்; மூடப் பழக்க வழக்கங்களைக் கடிந்து பாடினார். கண்மூடி வழக்கங் களைச் சாடும் இவர் பாடல்களில் புயலின் வேகத்தைத்தான் காணமுடிந்தது.

பகுத்தறிவுப் பாவலராக மாறிய பாரதிதாசனின் பாடல்கள் அரசியல், பொருளியல், சமுதாயம் மூன்றிலும் பெரும் புரட்சியை உண்டுபண்ணக் கூடியவைகளாக இருந்தன. அவர் நெஞ்சத் திலிருந்து வெளிக்கிளம்பிய பாடல்கள், எரிமலையிலிருந்து வெளிவரும் தீப்பொறிகளாகவே காணப்பட்டன. இடையிடையே வரும் கேலியும்கிண்டலும், அப் பொறிகளின் வெம்மையைச் சற்றே தணிவித்து இளஞ்சூடாக்கிவிடும்.

சமுதாய வழிகாட்டி

சமுதாயத்தில் மண்டிக்கிடந்த பல கொடுமைகளை இவர் கடிந்து பாடியதைப்போல் பிறர் பாடவில்லை என்றே கூறலாம். சாதிக் கொடுமைகளையும் போலிச் சமயக்கொள்கைகளையும் தகர்த்தெறியும் வெடிகுண்டுகளாகவே இவர் பாடல்கள் வெடித்தன. நம் நாட்டுப் பெண்கள் நிலையைப்பற்றிப் பாடிய பாடல்களில் காணல் அரிது. குழந்தை மணத்தைக் கண்டு இவர் பொருமினார்; வயதுப் பொருத்தமின்றி நடைபெறும் திருமணங்களைக் கண்டு திடுக்கிட்டார்; விதவை என்னும் பெயரால் இளம் பெண்கள் படும் இன்னல்களைக் கண்டு இரங்கினார். குமுறி எழுந்தது பாரதி தாசன் நெஞ்சம். மாதர் மறுமணத்தை இவர் வற்புறுத்திப் பாடினார்.

இவர் தாம் பிறந்த தமிழ்நாட்டை, தென்னாட்டைக் கண்டு
கண்டு மனங்கலங்கினார். மக்கள் அரசியலில் அக்கறை காட்டாமல், சமுதாயச் சீர்கேடுகளைச் சிந்தை செய்யாமல், அறிவை வளர்க்க ஆர்வம் இல்லாமல், மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டுச் சீரழிக்
கின்றனரே என்று எண்ணிஎண்ணி ஏங்கினார். அந்த ஏக்கத்தை,

‘தென்னாட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்
செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்!’

என வரும் இவர் பாடல் அடிகளிலே காணலாம்.

சோம்பிக் கிடந்த மக்களைத் தட்டி எழுப்பி, அவர்கள் எழுச்சிகொள்ளுமாறு இவர் பல பாடல்களைப் பாடினார். அவை