மற்ற சமத்துவ மனப்பான்மை, வீர உணர்வு, பாட்டுத் திறம் இவற்றைக் கண்டு, சுப்புரத்தினம் அவரிடம் அளவுகடந்த ஈடுபாடு கொண்டார்; அந்த ஈடுபாட்டால் தமது பழைய கருத்தை - பழைய நடையை மாற்றிக்கொண்டு புதிய கருத்து, புதிய நடை என்று பாடத் தொடங்கினார். எளிய நடையில், இனிய தமிழைப் புதிய பாங்கில் பாடுதற்கு வழிகாட்டியாகப் பாரதியார் விளங்கின மையால் சுப்புரத்தினம், ‘பாரதிதாசன்’ என்று தமது பெயரையும் மாற்றி அமைத்துக்கொண்டார். பாரதியார் தமக்கு வழிகாட்டியாக விளங்கியதைப் பாரதிதாசனே, ‘பாடலில் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிர மணிய பாரதி தோன்றிஎன் பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்’ என்று பாடியுள்ளார். அந்நாளில் பாரதியாரைப் பற்றி எழுதிய ஒருவர் ‘அவர் உலக கவி அல்லர்’ என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது பாரதிதாசன் வெகுண்டெழுந்து, ‘பாரதியார் உலக கவியே’ என்று மறுப்பு ஒன்றினை எழுதினாரென்பதிலிருந்து, பாரதியாரிடம் இவர் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பது தெரியும் பாரதிதாசனுடன் நெருங்கி உரையாடிப் பழகியவர்களுக்கு நன்கு தெரியும் அந்த மதிப்பு. இ.புரட்சிக் குயில் சுப்புரத்தினம் பாரதிதாசனாக மாறிய பிறகு இவருடைய எண்ணத்தில் புரட்சி; சொல்லில் புரட்சி; எழுத்தில் புரட்சி; செயலில் புரட்சி; சுருங்கக் கூறின் இவர் தோற்றமே புரட்சி. பகுத்தறிவுப் பாவலர் பாரதியாருடைய தொடர்பு பாரதிதாசனுக்கு ஒரு திருப்பு மையமாக இருந்தது. அந்தச் சமயத்தில் பகுத்தறிவு இயக்கம் தமிழ்நாடெங்கணும் பரவிக் கொண்டிருந்தது. பாரதியாரால் எழுச்சி பெற்றிருந்த பாரதிதாசன் உள்ளத்தில், பகுத்தறிவுக் கருத்துகள் ஆழப் பதிந்து, முளைத்துச் செழித்து. வளர்ந்து, புரட்சிப் பாடல் களாக |