பக்கம் எண் :

242கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

பாரதியாரின் நாட்டுப் பாடல் ஒன்றை இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தார். இதனைக்கேட்ட பாரதியார் மனமகிழ்ந்தார்; சுப்புரத்தினத்தைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பாரதியார் அங்கு வந்திருப்பதை அறிந்த சுப்புரத்தினம் நேரிற் சென்று அவரைக் கண்டார். அன்றே பாதியாருக்கு. இவர்மீது ஓர் நல்லெண்ணம் உண்டாகிவிட்டது. அன்று முதல் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.

பாரதியாரின் பாராட்டு

நாளுக்குநாள் அத் தொடர்பு வளர்ந்துவந்தது. ஒருநாள் நண்பர் சிலருடன் பாரதியார் உரையாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது சுப்புரத்தினமும் அங்கிருந்தார். நண்பர்களிடத்தில் சுப்புரத்தினத்தைப் பற்றிப் பாரதியார் கூறினார். ‘சுப்புரத்தினம் பாடல்கள் எழுத வல்லவன்’ என்று வியந்து கூறி, ஒரு பாட்டும் எழுதப் பணித்தார். உடனே சுப்புரத்தினம்

‘எங்கெங்குக் காணினும் சக்தியடா! - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா!’

என்று தொடங்கும் பாடலைப் பாடிக் காட்டினார். பாடலைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். சுப்புரத்தினத்தின் பாட்டுத் திறத்தையும், எழுச்சி மனப்பான்மையையும் அறிந்து கொண்ட பாரதியார் இவரைத் தமக்கு உற்ற நண்பராக ஏற்றுக் கொண்டார். இந்தப் பாடலைப் பாரதியாரே ‘சுதேசமித்திரன்’ இதழுக்கு அனுப்பி வைத்தார்; அனுப்பியபோது, ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது’ என்று தாமே அதில் எழுதி அனுப்பினார். பாரதியாரால், ‘பாவலர்’ என்று பாராட்டப்
பெற்ற சிறப்பை இவர் ஒருவரே பெற்றார். இவ்வாறு பத்து ஆண்டு
களாகப் பாரதியாருடன் சுப்புரத்தினம் நெருங்கிப் பழகிவந்தார். அதனால் இவர் அவரைப் பற்றி நன்கு உணர்ந்துகொள்ள முடிந்தது.

பாரதிதாசன்

இருவரும் பழகிவந்தபோது, தம்மிடம் பாரதியார் சங்க இலக்கியங்களைப்பற்றித் தெரிந்து கொண்டதாக இவர் கூறியிருக் கிறார். பாரதியாருடைய நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சாதிபேத