பொருந்தப் பொறுப்புடன், குடும்பத்தை நடத்திவந்தார், பாவலர் உள்ளம் குழந்தையுள்ளம் போன்றது. அந்த உள்ளத்திற்கேற்றவாறு, பழநியம்மாள் குறிப்பறிந்து ஒழுகிவந்தார். பாவலரும் தம் துணைவியாரிடம் அன்பும் பரிவும் காட்டினார். எனினும், சில வேளைகளில், பாவலர் தமக்குள்ள இயற்கைக் குணத்தால் துணைவியார்க்கு மாறாக நடந்து கொள்வார். அப்பொழுதும் அந்த அம்யைhர் மனம் வருந்தாது, கணவர்க்கு வேண்டிய பணிகள் செய்துவந்தார்; அத் தொண்டிலே இன்பமுங் கண்டு வந்தார். இத் தம்பதியர்க்கு மக்கட் செல்வமும் மனமகிழ வாய்த் துள்ளது. ஆ. பாரதிதாசன் பாரதியார் தொடர்பு தமிழ்நாடு பகுதி பகுதியாக ஆங்கிலேயரிடமும் பிரஞ்சுகார ரிடமும் அடிமைப்பட்டுக் கிடந்ததைக் கண்டு சுப்புரத்தினம் மனம் வருந்தினர்; தமிழர் தம்மை நினையாது, தாய்மொழியையும் கருதாது, உண்ணுதலும் உறங்குதலும் அன்றி வேறொன்றும் அறியாது, உரிமையுணர்வு அற்றுக்கிடக்கும் நிலையைக் கண்டு நைந்துநைந்து உருகுவார். பாவலர்கள் உணர்ச்சி வயப்பட்டால், அவ்வுணர்ச்சி பாடலாகத்தானே வெளிப்படும்! இப்படி இவர் அடிக்கடி எழுதிய பாடல்களைப் பிறருக்குப் பாடிக்காட்டுவார். இச் சமயத்தில் சுப்பிரமணிய பாரதியார் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். ஆங்கிலேயர் பிடியினின்றும் நாடு விடுதலை பெறவேண்டும் என்று கருதிய பாரதியார், தம் பாட்டுத் திறத்தாலே வையத்தை விழிப்படையச் செய்துகொண்டிருந்தார். இவருடைய பாடல்களைக் கேட்டு, நாட்டு மக்கள் உள்ளங்களிலே, விடுதலை வேட்கை கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. ஆங்கிலேயரின் அடக்குமுறை தாளமாட்டாமல், பாரதியார் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். ஒருநாள் நண்பர் ஒருவரின் இல்லத்தில் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பாரதியாரும் வந்திருந்தார். சுப்புரத் தினமும் வந்திருந்தார். பாரதியார் வந்திருப்பது சுப்புரத்தினத்திற்குத் தெரியாது. திருமணத்தில் விருந்துக்குப் பிறகு நண்பர்கள் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சுப்புரத்தினம், |