240 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
புலவர் பங்காரு ஆசிரியரிடம் சுப்புரத்தினமும் வேறு மாணவர் சிலரும் தமிழ் பயிலச் சென்ற பொழுது, ‘ஙப்போல் வளை’ என்னும் ஆத்திசூடிப் பாட்டுக்குப் பொருள் கூறுமாறு ஆசிரியர் கேட்டார். வந்த மாணவருள் சுப்புரத்தினமே சரியான பொருள் கூறினார். அதனால் ஆசிரியர்க்குச் சுப்புரத்தினத்திடம் தனி அன்பு உண்டாகியது. இலக்கியம், இலக்கணம், நிகண்டு முதலியவற்றை அவர் நன்முறையில் கற்பித்தார். அவற்றைச் செம்மையாகக் கற்றுவந்த சுப்புரத்தினம். கி.பி. 1908ஆம் ஆண்டு, கல்வே கல்லூரியில் தமிழ்த் தேர்வு எழுதினார்; புலவர் வகுப்புத் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். தந்தையார் பெயருடன் சேர்த்துக் கனக சுப்புரத்தினமாக இருந்த இவர் புலவர் சுப்புரத்தின மாக விளங்கினார். தொழிலும் மணமும் புலவர் சுப்புரத்தினம், காரைக்காலுக்குப் பக்கத்தில் இருக்கும் ‘நிரவி’ என்னும் ஊரிலுள்ள அரசினர் பள்ளியில், தமிழாசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். அப்போது இவருக்கு மாத ஊதியம் முப்பது வெண்பொற்காசுகள். நிரவியில் பணியாற்றிக் கொண்ருந்த பொழுது. இவர் புதுச்சேரிக்கல்வே கல்லூரிக்குத் தமிழ்ப் பேராசிரியராக மாற்றம் பெற்றார். புலவர் சுப்புரத்தினம் நிரவியிலும் புதுச்சேரியிலும் ஆசிரியப் பணியை மேற்கொண்டிருந்த காலத்திலும், அழகிய சுவை மிக்க பாடல்கள் பலவற்றைப் பாடிவந்தார்; கடவுள் அன்பு, நாட்டுப் பற்று, ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ மனப்பான்மை இவற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை அப்பொழுது எழுதிவந்தார். ‘சுப்பிரமணியர் துதியமுது’ ‘கதர்ப்பாட்டு’, ‘சமத்துவப் பாட்டு’ முதலியன அக் காலத்தில் இவர் எழுதியவையே. சுப்பிர மணியர் துதியமுதிலிருந்து சில பாடல்களை இவரே தம் வாயால் இனிமையாகச் சில சமயங்களில் பாடிக் காட்டுவார். தந்தையார் கனகசபை, சுப்புரத்தினத்துக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணினார்; தக்க இடத்தில் பெண் பார்த்தார். பரதேசி - காமாட்சி என்பவர்க்குத் திருமகளாகத் தோன்றிய பழநியம்மாளே அந்தப் பெண். முறைப்படி திருமணம் நடந்தது. இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட பழநியம்மாள், அன்பும் பண்பும் |