பக்கம் எண் :

246கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

மக்கள் பாராட்டு

தமக்கு விழிப்புணர்வூட்டிய புரட்சிக் கவிஞரைப் பாராட்டவும் நன்றி செலுத்தவும் கருதித் தமிழக மக்கள் திரண்டெழுந்தனர்; பெருநிதி திரட்டித் தருவதென்றும் முடிவு செய்தனர். ‘அறிஞர்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட வரும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் திகழ்ந்து மறைந்தவரும் ஆகிய மாமேதை அண்ணா அவர்களே முன்னின்று நிதி திரட்டினார்; தமதுபேச்சாலும் எழுத்தாலும் இருபத்தையாயிரம் ரூபாய் திரட்டினார். 1946ஆம் ஆண்டு, சென்னை மாநகரில், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாராட்டுக் கூட்டம் நடந்தது. வெள்ளம்போல் தமிழர் கூட்டம் திரண்டு வந்தது. சொல்லின் செல்வர், பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை, வீரத்தமிழர் ப.ஜீவானந்தம் போன்ற பெருமக்கள் பலர் பாராட்டிப் பேசினர். சுருங்கக் கூறின், பிற் காலத்தில் அடையவேண்டிய சிறப்பு, பெருமை, புகழ் அனைத்தையும் தம் வாழ்நாளிலேயே புரட்சிக் கவிஞர் பெற்றுவிட்டார் எனலாம்.

புரட்சிக் குயில்

புரட்சிக் கருத்துகளை மக்களிடையே பரப்ப எண்ணிய காரணத்தாலும், அவற்றை எழுத வேண்டிய பணி மிகுதியாக இருந்ததாலும் புரட்சிக் கவிஞர், 1946 ஆம் ஆண்டு தமது ஆசிரியப் பணியிலிருந்து விலகிக்கொண்டார்; அதன் பின்னர், 1948இல் ‘குயில்’ என்னும் திங்கள் இதழைத் தாமே தொடங்கி நடத்திவந்தார். இதழ் முழுவதும் பாடல்களாகவே இருக்கும்; புரட்சிக் கருத்துக்
களையே தாங்கிவரும். முதன்முதல் முழுதும் பாடல்களாகவே வெளிவந்த இதழ், இந்தப் புரட்சிக் குயில்தான்.

ஈ.பாவேந்தர்

விருத்தப்பாவலர்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், வெண்பா, ஆசிரியப்பா முதலான எல்லாவகைப் பாக்களையும் பாட வல்லவர்; ஆயினும், விருத்தப்பா என்னும் பாடல் எழுதுவதில் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். வெண்பாப் பாடுவதில் புகழேந்திப் புலவர் எவ்வாறு வல்லவராக விளங்கினாரோ, அவ்வாறே விருத்தகம் பாடுவதில் கம்பர் முன்பு வல்லவராக விளங்கினார். கம்பருக்குப் பிறகு,