பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்33

(செய்யும் - என்னும் வாய்பாட்டு வினைமுற்று)

(படர்க்கை நான்கு பாலுக்கும் பொதுவினை)

அவன் உண்ணும் - அவள் உண்ணும்
அது உண்ணும் -அவை உண்ணும்

இங்கே, செய்யும் என்னும் எச்சத்தால் வந்த செய்யும் என்னும் வாய்பாட்டுள் அடங்கும் ‘உண்ணும்’ என்ற வினைமுற்றுச் சொல், பலர் பால் ஒழிந்த படர்க்கை நான்கு பால்களிலும் இரு திணைப் பொதுவினையாக வந்துள்ளது.

இலக்கண விதி: செய்யும் என்னும் எச்சத்தால் ஆகம் செய்யும் என்னும் முற்றானது, உயர்திணைப் பன்மைப் படர்க்கை யிலும், முன்னிலையிலும், தன்மையிலும் வாராது. எனவே, பலர்பால் ஒழிந்த படர்க்கை நான்கு பால்களிலும் வந்து இரு திணைப் பொதுவினையாகம்.

(யார்-என்னும் வினாவினைக் குறிப்புமுற்று)

(உயர்திணை முப்பாற் பொதுவினை)

அவன் யார்- அவள் யார்-அவர் யார்

இங்கு, ‘யார் ’ என்னும் வினாவினைக் குறிப்பு முற்று, உயர்திணை முப்பால்களுக்கும் பாற்பொதுவினையாக வந்துள்ளது.

அஃதி யார் - அவை யார்
யான் யார் - யாம் யார்
நீ யார் - நீவிர் யார்

இங்கு, ‘யார்’ என்னும் வினாவினைக் குறிப்பு முற்று, புதியன புகுதலாக அஃறிணை இரு பால்களிலும், தன்மை முன்னிலை ஆகிய ஈரிடத்திலும் பொதுவினையாக வந்துள்ளது. எனவே, யார் என்னும் வினாவினைக் குறிப்புமுற்று, புதிய வழக்குப்படி திணை பால் இடங்களுக்குப் பொது வினையாகும்.

இலக்கண விதி: வினாப் பொருளைத் தரும் யார் என்னும் வினாவினைக் குறிப்புமுற்று, உயர் திணை முப்பால் களுக்கும் பொதுவினையாக வரும்.