பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்5

தேசீய கீதம்

ஜன கண மன அதிநாயக ஜயஹே
     பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
     த்ராவிட உத்கல வங்கா
விந்த்ய ஹிமாசல யமுனா கங்கா
     உச்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
     தவசுப ஆசிஷ மாஹே
காயே தவஜய காதா
     ஜன கண மங்கள தாயக ஜயஹே
பாரத பாக்ய விதாதா
     ஜயஹே ஜயஹே ஜயஹே
ஜய ஜய ஜய ஜயஹே.

நாட்டு வணக்கம்

இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற நீதான்
     மக்கள் எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செலுத்துகிறாய்.
நின்திருநாமம், பஞ்சாபையும் சிந்துவையும்
     குஜராத்தையும் மஹாராஷ்டிரத்தையும்,
திராவிடத்தையும் ஒரிஸாவையும் வங்காளத்தையும்
     உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது;
அது விந்திய ஹிமாலய மலைகளில் எதிரொலிக்கிறது;
     யமுனை கங்கை நதிகளின் இன்பநாதத்தில் கலக்கிறது;
இந்தியக் கடல் அலைகளால் ஒலிக்கப்படுகிறது;
     அவை நின் ஆசியை வேண்டுகின்றன;
நின் புகழைப் பாடுகின்றன;
     இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற உனக்கு
வெற்றி, வெற்றி, வெற்றி.