பக்கம் எண் :

60கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

நீ, நீர், எல்லீர், நீயிர், நீவிர் இவை ஐந்தும் முன்னிலை இடத்திற்குரிய ஒருமை-பன்மைப் பெயர்களாகும்.

தன்மைப் பெயரும், முன்னிலைப் பெயரும் ஒழிந்த, அவன், அவள், அவர், அது, அவை என்பனவற்றை உள்ளிட்ட பிற பெயர்கள் எல்லாம் படர்க்கை இடத்திற்குரியன.

மூவிடப் பொதுப்பெயர்

யாம் எல்லாம் - தன்மையிடம்

நீர் எல்லாம் - முன்னிலையிடம்

அவர் எல்லாம் -
அவை எல்லாம் -படர்க்கையிடம்

‘எல்லாம்’ என்பது தன்மை - முன்னிலை - படாக்கை ஆகிய மூன்று இடத்திற்குப் பொதுப்பெயராக வந்துள்ளது.

இதுவரை பார்த்தவற்றிலிருந்து பெயர்கள், இருதிணை ஐம்பால் மூவிடங்களில், ஒன்றனை ஏற்பனவும், பலவற்றினை ஏற்பனவுமாய் வந்தமை தெரியவரும்.

இலக்கண விதி: இடுகுறியும் காரணக்குறிப்புமாகிய பெயர்கள், மரபினையும் ஆக்கப்பாட்டினையும் தொடர்ந்து வர, வினையாலணையும் காரணக்குறிவாய், எட்டு வேற்றுமை களும் சார்தற்கு இடமாகி, இருதிணை ஐம்பால் மூவிடத்து ஒன்றனை ஏற்பனவும், பலவற்றினை ஏற்பனவுமாய் வருவன பெயர்ச் சொற் களாகும்.

இடுகுறி காரண மரபோ டாக்கம்
தொடர்ந்து தொழிலை காலந் தோற்றா
வேற்றுமைக் கிடனாய்த் திணைபா லிடத்தொன்
றேற்பவும் பொதுவு மாவன பெயரே. (ந-நூற்பா 275.)

2. வினைச்சொல்

(1) தெரிநிலை வினை

சேணியன் ஆடை நெய்தான்

இத்தொடரில் ‘நெய்தான்’ என்னும் வினைச்சொல், நெய்தலாகிய தொழில் முற்றுப் பெற்றதையும், இறந்த காலத்தையும் உணர்த்துகிறது.