எனவே. நெய்தான் என்பது தெரிநிலை வினை முற்றாகும். காலம் வெளிப் படையாகத் தெரிய நிற்கும் வினை, தெரிநிலை வினை எனப்படும். இங்ஙனம் வருகின்ற தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள் செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் என்ற ஆறனையும் தரும். (1)செய்பவன்-(சேணியன்) (2)கருவி -(நூல்) (3)நிலம்-(வீடு - இடம்) (4)செயல்-(நெய்தல்) (5)காலம்-(இறந்தகாலம்) (6)செயப்படுபொருள்-(ஆடை) நெய்தான் என்ற தெரிநிலை வினைமுற்றுச் சொல்லானது, சேணியனாகிய நெய்பவனையும், நெய்தற்கு முதற்கருவி துணைக் கருவிகளாகிய நூல், தறி முதலியனவற்றையும், நெய் தற்கு இடமாகிய வீட்டையும், செயலாகிய நெய்தலையும், இற ந்த காலத்தையும், செயப்படுபொருளாகிய ஆடையையும் உணர்த்துகின்றது. இங்ஙனம் வருகின்ற தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், பகுதியால் செயலையும், விகுதியால் செய்பவனையும், இடை நிலையால் காத்தையும் உணர்த்தும். மற்றைய மூன்றையும் இவற்றின் தொடர்பால் உணரமுடியும். ஒரு சில தெரிநிலை வினைமுற்றுச் சொற்களில் செய்பவன் முதலிய ஆறும் வராமல், குறைந்து வருவதும் உண்டு. அஃதா வது, செயப்படுபொருள் குறைந்து வரும். கண்ணன் வீட்டிற்குச் சென்றான் இத் தொடரில் உள்ள ‘சென்றான்’ என்பது தெரிநிலை வினைமுற்றுச் சொல்லாகும். இங்கே, செல்லுதலாகிய தொழிலைச் செய்பவன் உயர்திணை ஆண்பாலாகிய கண்ணன் என்பதும், செல்லுதற்கக் கருவி கால்கள் என்பதும், சென்ற இடம் வீடு என்பதும் தெரிவதுடன், செல்லுதலாகிய தொழி லும், இறந்த காலமும் தெரிகின்றன. ஆனால், செயப்படு பொருள் மட்டும் தெரிய வில்லை. இங்கச் செயப்படுபொருள் இல்லை. |