பக்கம் எண் :

8கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

அக் காற்று, மூக்கை அடைந்தவுடன் ன்-ங் என்ற மெல்லின மெய்யெழுத்துக்கள் பிறத்தல் தெரியவரும்.

அக் காற்று, கழுத்தை அடைந்தவுடன் ழ்-ல் என்ற இடையின் மெய்யெழுத்துக்கள் பிறத்தல் தெரியவரும்.

ஆ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஓள என்ற பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும்.

க், ச், ட், த், ப், ற் என்ற வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறும், மார்பை இடமாகக் கொண்டு பிறக்கும்.

ங், ஞ், ண், ந், ம், ன் என்ற மெல்லின மெய்யெழுத்துக்கள் ஆறும், மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கும்.

ய், ர், ல், வ், ள், ழ் என்ற இடையின மெய்யெழுத்துக்கள் ஆறும், கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும்.

இலக்கண விதி: உயிர் எழுத்துக்களுக்கும் இடையின மெய் எழுத்துக்களுக்கும் பிறப்பிடம் கழுத்தாகும். வல்லின மெய் எழுத்துக் களுக்குப் பிறப்பிடம் மார்பாகும். மெல்லின மெய் எழுத்துக் களுக்குப் பிறப்பிடம் மூக்காகும்.

அவ்வழி,-
ஆவி யிடைமை யிடமிட றாகும்
மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை.

(ந-நூற்பா 75.)

3. உயிரெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு

(அ, ஆ இவற்றின் முயற்சிப் பிறப்பு)

அரசன் - ஆண்டி

இச்சொற்களில் உள்ள அ-ஆ என்ற உயிரெழுத்துக்களை ஒலித்துப் பாருங்கள். இவற்றை ஒலிப்பதற்கு வாய் திறத்தலாகிய முயற்சி மட்டும் போதும் என்பது தெரியவரும்.