இடையின மெய்யெழுத்தாகிய ல் என்பது கழுத்தைப் பிறப் பிடமாகக்கொண்டு, மேல்வாய்ப் பல்லினடியை, நாவோரமானது தடித்து நெருங்கும் முயற்சியினால் பிறப்பது தெரியவரும். எனவே, எழுத்துக்களின் ஒலி வடிவப் பொதுப் பிறப்பிற்கு இடம், முயற்சி என்ற இரண்டும் காரணமாக அமைகின்றன என்பது தெரியவரும். இலக்கண விதி: ஒலி எழுத்தாகிய காரியத்திற்கு வேண்டும் காரணங்களில் சிறிதும் குறைவின்றி நிறைத் உயிரினது முயற்சி யினால், உள்ளே நின்ற உதானன் என்னு காற் றானது எழுப்ப, அதனால் எழுகின்ற செவிப் புலனாம் அணுக் கூட்டம், மார்பும், கழுத்தும், தலையும், மூக்கும் ஆகிய நான்கு இடங்களையும் பொருந்தி, உதடும், நாக்கும், பல்லும், மேல்வாயும் ஆகிய நான் கனுடைய முயற்சிகளால் வெவ்வேறு ஒலி எழுத்துக்களாகத் தோன்று தல் அவற்றின் பொதுப் பிறப்பாகும். நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின் வெவ்வே றெபத்தொலி யாய்வரல் பிறப்பே (நன்னூல்-நூற்பா 74.) 2. முதலேழுத்துகளின் இடப் பிறப்பு அமைச்சர்-ஆட்சி கத்தரி-வற்றல் மூன்று-சங்கம் யாழ்-நூல் மேலே உள்ள சொற்களை ஒலித்துப் பாருங்கள். உத்தியி லிருந்து வரும் உதானன் என்னும் காற்று, கழுத்தை அடைந்தவுடன், அ-ஆ என்ற உயிர் எழுத்துக்கள் பிறத்தல் தெரியவரும். அக் காற்று, மார்பை அடைந்தவுடன் த்-ற் என்ற வல்லின மெய்யெழுத்துக்கள் பிறத்தல் தெரியவரும். |