அன்ன, இன்ன என்னம் பெயரெச்சக் குறிப்பு இரண்டும், இவை போல்வன பிறவும் உவமவுருபுகளாம். போலப் புரைய வொப்ப வுறழ மானக் கடுப்ப வியைய வேய்ப்ப நேர நிகர வன்ன வின்ன என்பனவும் பிறவு முவமத் துருபே. (ந-நூற்பா 367.) பயிற்சி வினாக்கள் 1.வினா எத்தனை வகைப்படும்? வகைக்கொரு சான்று தருக. 2.விடை எத்தனை வகைப்படும்? வiகொரு சான்று காட்டி விளக்குக. 3.இனமுள்ள அடைமொழி என்றால் என்ன? இனமில்லா அடைமொழி என்றால் என்ன? விளக்குக. 4.மோர்ப்பானை, பச்சரிசி, தென்குமரி, புன்செய்ப் பயிர் இவற்றுள் இனமுள்ள அடைமொழிகள் எவை? இனமில்லாம அடைமொழிகள் எவை? இனமுள்ள அடைமொழி களுக்கு இனம் எவை? 5.பொருள்கோள் என்றால் என்ன? 6.ஆற்றுநீர்ப் பொருள்கோளைச் சான்றுடன் விளக்குக. 7.கொண்டு கூட்டுப் பொருள்கோளை விளக்குக. 8.தாப்பிசைப் பொருள்கோளைச் சான்று காட்டி விளக்குக. 9.மொழிமாற்றுப் பொருள்கோள் என்றால் என்ன? ஓர் எடுத் துக்காட்டின் வாயிலாக விளக்குக. 10.எவையேனும் ஐந்து உவம உருபுகளைக் கூறி, அவற்றிற்கு எடுத்துக்காட்டுக்களும் தருக. |