பக்கம் எண் :

86கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

கூட்டி ஓரடியுள்ளே கூறுவது, மொழி மாற்றுப் பொருள்கோள் எனப்படும்.

4. உவமவுருபுகள்

“பவளத் தன்ன மேனி”

‘பவளம் போன்ற (செந்நிற) உடல்’ என்பது இத் தொடரின் பொருளாகும்.

இத் தொடரில் ‘பவளம்’ உவமை ‘மேனி’ உவமேயம், ‘அன்ன’ என்பது உவம உருபு.

இவ்வாறு வரும் உவம உருபுகள் பலவுண்டு. அவை போல, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன என்பனவும் பிறவுமாகும்.

‘குயில் போலக் கூவினாள்’
‘தாமரை புரையுங் காமர் சேவடி’
‘தருமனை ஒப்பப் பொறுமை யுடையான்’
‘கூற்றுவன் உறழும் ஆற்றலான்’
‘மை மானும் வடிவம்’
‘மழை கடுக்கும் கையான்’
‘கற்கண்டு இயையப் பேசுவான்’
‘குன்றி ஏய்க்கும் உடுக்கை’
‘துடி நேர் இடை’
‘சேல் நிகர்க்கும் விழி’
‘வேய் அன்ன தோள்’
‘தேன் இன்ன மொழி’

(‘பிறவும் உவமத்துருபே’ என்றதனால், போல், புரை, என்றற் றொடக்கத்து வினையடியாற் பிறத்தற்குரிய மற்றை வினையெச்ச விகற்பங்களும், பெயரெச்ச விகற்பங்களும், பொருவ, ஏற்ப, அனைய, இகல, எதிர, சிவண, மலைய முதலானவையும் உவமவுருபு களாக வரும்.)

இலக்கண விதி: போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர என்னும் செயவெனெச்சம் பத்தும்,