எனவே, இது தாப்பிசைப் பொருள் கோள் எனப்படும். (தாம்பு= ஊசல்; தாப்பு என வலித்தல் விகாரம் பெற்றுள்ளது. இசை-சொல்.) இலக்கண விதி: இடையில் நிற்கும் சொல், முதலிலும், ஈற்றிலும் சென்று பொருளைத் தருவது தாப்பிசைப் பொருள் கோளாகும். 4. மொழிமாற்றுப் பொருள்கோள் “சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை” இப் பாடலில் ‘ஆழ’ என்னும் பயனிலைக் கேற்ற ‘அம்மி’ என்னும் சொல்லை, ‘மிதப்ப’ என்னும் பயனிலைக்கு மாற்றிக் கூறப்பட்டுள்ளது. ‘மிதப்ப’ என்னும் பயனிலைக் கேற்ற ‘சுரை’ என்னும் சொல்லை, ‘ஆழ’ என்னும் பயனிலைக்கு மாற்றிக் கூறப்பட் டுள்ளது. ‘நீத்து’ என்னும் பயனிலைக் கேற்ற ‘முயல்’ என்னும் சொல்லை, ‘நிலை’ என்னும் பயனிலைக்கு மாற்றிக் கூறப்பட் டுள்ளது. ‘நிலை’ என்னும் பயனிலைக் கேற்ற ‘யானை’ என்னும் சொல்லை, ‘நீத்து’ என்னும் பயனிலைக்கு மாற்றிக் கூறப்பட் டுள்ளது. இங்ஙனம் மாற்றிக் கூறியபடி பொருள் கொள்ள முடியாது. எனவே, ‘அம்மி அழ’ என்றும், ‘சுரை மிதப்ப’ என்றும் ‘முயற்கு நீத்து’ என்றும் ‘யானைக்கு நிலை’ என்றும் மொழி மாற்றிப் பொருள் கொள்ளுதல் வேண்டும். “காடுகள் சூழ்ந்துள்ள நாட்டை உடைய தலைவனது மலையின் கண் உள்ள சுனையானது, சுரைக்குடுக்கை மிதக்கத்தக்க இயல்பை உடையது; அம்மி ஆழத் தக்க இயல்பை உடையது; மலை போன்ற யானை கால் ஊன்றி நிற்கத் தக்க இயல்பை உடையது; முயல் நீந்தக் தக்க இயல்பை உடையது” என்பதே பொருளாகும். இலக்கண விதி: ஏற்ற இரண்டு பயனிலைகளுக்குப் பொருந்தும் மொழிகளை, ஏலாத பயனிலைகளுக்குத் தனித்தனி |