பக்கம் எண் :

84கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

கோழி வெண்முட்டை உடைத்தன்ன பசலை தணிவாம்’ எனச் சொற்களை எனச் சொற்களை முன்னும் பின்னும் கொண்டுகூட்டிப் பொருள் கொண்டமையால், இது கொண்டு கூட்டுப் பொருள் கோளாகும்.

இக் கொண்டு கூட்டுப் பொருள்கோளுக்கும், மொழி மாற்றுப் பொருள்கோளுக்கும் உள்ள வேறுபாடு வருமாறு:

கொண்டுகூட்டுப் பொருள்கோளில் பல அடிகளில் நின்ற சொற்களை முன்னும் பின்னும் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

மொழிமாற்றுப் பொருள்கோளில், ஒவ்வோர் அடியிலும் நின்ற சொற்களை, அவ் வடிக்குள்ளே மாற்றிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

இலக்கண விதி: செய்யுளடிகள் பலவற்றிலும், இயல்பாகிய ஆற்றுநீர்ப் பொருள்கோளுக்கு ஏலாது அமைந்து கிடந்த சொற்களை எடுத்து, அப் பொருளுக்கு ஏற்றவிடத்துக் கூட்டிப் பொருள் கொள்வது கொண்டுகூட்டுப் பொருள் கோளாகும்.

3. தாப்பிசைப் பொருள்கோள்

“உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு.”

இத் திருக்குறளில் , “புலால் உண்ணாமையாகிய அறத்திலே தான் உயிர் அடையும் நற்கதி அமைந்துள்ளது; புலால் உண்டால், அங்ஙனம் உண்டவர்களை விழுங்கிய நரகம், அவர்களை உமிழ் வதற்கு வாயைத் திறவாது” என்ற பொருள் அமைந்துள்ளது.

இத் திருக்குறளில், நடுவே நிற்கும் ‘ஊன்’ என்ற சொல், ‘ஊன் உண்ணாமை யுள்ள துயிர் நிலை’ என முன்னும், ‘ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யா தளறு’ எனப் பின்னும் சென்று பொருள் தருகின்றது.

நடுவே நிற்கும் ஊசல், ஆட்டும்பொழுது முன்னும் பின்னும் சென்று வருதல் போல, நடுவே நிற்கும் ‘ஊன்’ என்ற சொல், பொருள் கொள்ளும் பொழுது முன்னும் பின்னும் சென்று பொருள் தருகின்றது.