பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்83

ஆற்று நீர் ஆரம்பத்திலிருந்து இடையீடில்லாமல் தொடர்ந்து செல்லுதல்போலப் பாட்டினுள் எழுவாய் முதலில் அமைய, இடையில் வினையெச்சங்கள் ஒன்றனை ஒன்று கொண்டு முடியு மாறு அமைந்து, இறுதியில் பயனிலை பெற்று முடிவது ஆற்று நீர்ப் பொருள்கோள் எனப்படும்.

இலக்கண விதி: மொழிமாற்று முதலியபோல், சொற் களைப் பிறழ்ந்து கொண்டு கூட்ட வேண்டாது, ஆற்று நீரொழுக்குப் போல நெறிப்பட்டு, இடையறாது அடிதோறும் சிறந்த பொருள் அங்காங்கு அமைந்து வருவது, ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனப்படும்.

இனி ஒருசாரார், ஏனைய அடிகளை நோக்காது அடிதோறும் பொருள் முடிந்து வருவது, ஆற்று நீர்ப் பொருள்கோள் என்பர். அதற்கு எடுத்துக் காட்டு வருமாறு:

“அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்;
விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம்;
சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம்;
கொலைப்பாலுங் குற்றமே யாம்.”

இப்பாடலில் உள்ள ஒவ்வொர் அடிகளும் தனித்தனியே பொருள் முடிந்துள்ளன.

2. கொண்டு கூட்டுப் பொருள்கோள்

“தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்
வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி
அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
வங்கத்துச் சென்றார் வரின்.”

“கப்பலேறிச் சென்ற தலைவன் வந்தால், மை போன்ற கரிய கூந்தலையுடைள தலைவியின் அழகிய உடம்பில், தேங்காய் போலத் திரண்டு உருண்ட கோரியின் வெண்மை யான முட்டை யை ஊடைத்து ஊற்றியது போன்ற பசலை நிறம் தனியும்” என்பது இப்பாடலின் பொருளாகும்.

இப்பாடலில், ‘வங்கத்துச் சென்றார் வரின், அஞ்சனத் தன்ன பைங்கூந்தல் மாமேனி தெங்கங்காய் போலத் திரண்டு ருண்ட