பக்கம் எண் :

82கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

ஆற்றுநீர்ப் பொருள்கோள், மொழி மாற்றுப் பொருள்கோள், நிரல்நிறைப் பொருள்கோள், பூட்டுவிற் பொருள்கோள், தாப்பிi பொருள்கோள், அளைமறி பாப்புப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள், அடிமறி மாற்றுப் பொருள்கோள் எனப் பொருள்கோள் எட்டு வகைப்படும்.

பொருள்கோள் எட்டனுள், ஆற்றுநீர்ப்பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள், தாப்பிi பொருள்கோள், மொழிமாற்றுப் பொருள்கோள் என்ற நான்கைப் பற்றிப் பார்ப் போம்.

1. ஆற்று நீர் பொருள்கோள்

“சொல்லரும் சூற்பசும் பாம்பின் றோற்றம்போல்
மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்
செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற்
கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே.”

“நெற்பயிர்கள், கருவுற்ற பச்சைப் பாம்பின் தோற்றம்போல மெதுவாகக் கருவுற்று, பின்பு கதிர்களை ஈன்று, கதிர்கள் முற்றாத பொழுது, செல்வம் பெற்ற கீழ்மக்கள் செருக்கித் தலைநிமிர்ந்து நிற்பதைப் போலத் தமது கதிர்களாகிய தலையை வணங்காமல் நேரே நிறுத்தி, கதிர்கள் முற்றியவுடன், உண்மைப் பொருளை ஆராய்ந்து கூறுகின்ற அறநூல்களைக் கற்ற அறிவுடைய சான்றோர் களைப் போலத் தலை வணங்கி விளைந்தன”என்பது இப் பாடலின் பொருளாகும்.

இப் பாட்டினுள், நெற்பயிரைக் குறிக்கும் ‘சொல்’ என்பது எழுவாயாக நிற்க, அதன் தொழிலாகிய கருவிருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என்னும் வினையெச்சங்கள் ஒன்றனை ஒன்று கொள்ளு மாறு இடையே அமைத்துக் ‘காய்தத’ என்னும் பயனிலையை இறுதியிலே தந்து முடித்தமையால், இப்பொருள்கோள், ஆற்று நீர்ப்பொருள்கோள் எனப்படும்.

ஆற்றுநீர்ப் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள் என்றும், யாற்றுவரவுப் பொருள்கோள் என்றும், ஆற்றொழுக்குப் பொருள்கோள் என்றும் வழங்கவும் படும். (ஆறு-யாறு.)