இனமில்லா அடைமொழி 1.பொருள்-உப்பளம் 2.இடம்-வடவேங்கடம் 3.காலம் -நாளரும்புஇவற்றிற்கு 4.சினை- இலைமரம்இனமில்லை 5.குணம்- செம்போத்து 6.தொழில்-தோய்தயிர் அளம் என்றவுடன் உப்பென்பதும், வேங்கடம் என்றவுடன் வடக்கு என்பதும், அரும்பு என்றவுடன் நாள் என்பதும், மரம் என்றவுடன் இலை என்பதும், போத்து என்றவுடன் செம்மை என்பதும், தயிர் என்றவுடன் தோய்தல் என்பதும் தாமே வந்து இயையும். இவ் அடைமொழிகள் இன்றியும், அளம் முதலியன பொருளாதி ஆறையும் உணர்த்தும். எனவே, உப்பில்லாத அளமும், வடக்கில்லாத வேங்கடமும், நாளில்லாத அரும்பும், இலையில்லாத மரமும், செம்மை நிற மில்லாத போத்தும், தோய்தல் இல்லாத தயிரும் இல்லை. ஆகவே, உப்பு, வடக்கு, நாள், இலை, செம்மை, தோய்தல் என்ற அறுவகைப் பெயரும் இனம் விலக்க வரவில்லை; அளம், வேங்கடம், அரும்பு, மரம், போத்து, தயிர் ஆகியவற்றைச் சிறப்பிக்கவே வந்துள்ளன. எனவே, இவை இனமில்லா அமைடமொழிகள் எனப்படும். இலக்கண விதி: பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற அறுவகைப் பெயர்களும், ஒன்றற்கு இனமுள்ள அடைமொழிகளாகவும், இனமில்லா அடை மொழிகளாகவும் உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வரும். 2. பொருள்கோள் (ஆற்றுநீர்-கொண்டுகூட்டு- தாப்பிசை-மொழிமாற்று) செய்யுளில் அமைந்துள்ள சொற்களைப் பொருள் பொருத்த முற எடுத்துக்கூட்டி அமைத்துப் பொருள் கொள்ளுதல், பொருள் கோள் எனப்படும். அவை எட்டு வகைப்படும். |