80 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
குறிக்கும் சொற்களாகும். தாமரைப் பூவிலல்,செந்தாமரை, வெண் டாமரை என்ற இரண்டு வகை உண்டு. அவற்றுள் செந்தாமரையை நீக்கி வெண்டாமரையைக் குறிப்பதற்கு ‘வெண்மை’ என்ற பண்புச் சொல் அடைமொழியாக வந்துள் ளது. இவ்வாறு ஒற்றற்கு இனமான பிறவற்றை விலக்கிக் குறித்த பொருளைக் காட்டவரும் சொல் ‘அடைமொழி’ எனப்படும். இவ்வாறு வரும் அடைமொழி ‘இனமுள்ள அடைமொழி’ ஆகும். வெண்டிங்கள் (வெண்மை+திங்கள் ) என்ற தொடரில், வெண்மை என்னும் பண்புச்சொல் திங்களுக்கு அடைமொழி யாக வந்துள்ளது. வெண்டிங்களுக்கு இனமாகக் கருந் திங்கள் இல்லை. எனவே, ‘வெண்மை’ என்ற அடைமொழி, இங்க, இனம் விலக்க வரவில்லை; திங்களின் சிறப்பைக் காட்டவே வந்துள்ளது. இவ்வாறு இனம் விலக்க வராமல், ஒரு பொருளின் சிறப்பைக் காட்ட வரும் அடைமொழி ‘இனமில்லா அடைமொழி’ ஆகும் (திங்கள் -சந்திரன்) எனவே அடைமொழி, இனமுள்ள அடைமொழி, இனமில்லா அடைமொழி என இருவகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய அறுவகைப் பெயர்களும் இனமுள்ள அடை மொழிகளாகவும், இனமில்லா அடைமொழிகளாகவும் வரும். இனமுள்ள அடைமொழி 1.பொருள் - நெய்க்குடம் (பாற்குடம்-இனம்) 2.இடம் - வயல் நெல் (மலைநெல்-இனம்) 3.காலம் - ஆடிக்கார்த்திகை (தைக்கார்த்திகை - இனம்) 4.சினை - பூமரம் (பழமரம்-இனம்) 5.குணம் - செந்தாமரை (வெண்டாமரை - இனம்) 6.தொழில் - ஆடுபாம்பு (ஆடாத பாம்பு - இனம்) நெய்க்குடம், வயல்நெல், ஆடிக்கார்த்திகை, பூமரம், செந் தாமரை, ஆடுபாம்பு என்ற சொற்றொடர்களில் உள்ள நெய், வல், ஆடி, பூ, செம்மை, ஆடு (தல்) என்ற அறுவகைப் பெயர்களும், இனம் விலக்க வந்த அடைமொழிகளாகும். எனவே, இவை இனமுள்ள அடைமொழிகள் எனப்படும். |