பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்79

வலிக்கிறது’ என நிகழ்காலத்தால் கூறினும் அமையும். (உற்ற துரைத்தல்-தனக்கு நேர்ந்ததைக் கூறுதல்.)

7. உறுவது கூறல் விடை:

‘சாத்தா இரவு விழிப்பாயா’ என்ற வினாவிற்குக் ‘கண் நோகும்’ என்று விடை கூறுதல் உறுவது கூறல் விடை எனப்படும். (உறுவது கூறல்-தனக்கு இனி நேரக்கூடியதைக் கூறுதல்.)

8. இனமொழி விடை:

‘சாத்தா பேனா உளதா?’ என்ற வினாவிற்குப் ‘பென்சில் உண்டு’ என்று விடை கூறுதல் இனமொழி விடை எனப்படும்.

இவ்விடை வகைகளும் சுட்டு விடை, மறை விடை, நேர் விடை மூன்றும் வினாவிற்கு ஏற்ற விடைகளாகும். ஏவல் விடை, வினாதல் விடை, உற்றதுரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்ற ஐந்தும் விடைப்பொருளைக் குறிப்பால் தருவன
வாகும். இவ்வைந்துள், வினாதல்விடை ஒன்றும் உடன் பாட்டுப் பொருளையும், ஏனைய நான்கும் எதிர்மறைப் பொருளையும் தரும்.

இலக்கண விதி: சுட்டும், எதிர்மறுத்தலும், உடன்பட லும், ஏவுதலும், எதிர் வினாவுதலும், உற்ற துரைத்தலும், உறுவது கூறலும், இனத்தைச் சொல்லுதலும் என, விடை எட்டு வகைப் படும். அவற்றுள் இறுதியாக உள்ள ஐந்தும், அவ்விடைப் பொருளைத் தருதலினால் விடைகளாகவே தழுவிக்கொள்வர்.

கட்டு மறைநே ரேவல் வினாதல்
உற்ற துரைத்த லுறுவது கூறல்
இனமொழி யெனுமென் ணிறையு ளிறுதி
நிலவிய வைந்துமப் பொருண்மையி னேர்ப.

(ந-நூற்பா 386.)

3. அடைமொழி - பொருள்கோள்

(1) அடைமொழி

வெண்டாமரை - வெண்டிங்கள்

வெண்டாமரை (வெண்மை+தாமரை) என்ற தொடரில், வெண்மை என்பது நிறத்தையும், தாமரை என்பது பூவையும்