பக்கம் எண் :

78கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

மதுரைக்கு வழி யாது? என வினவும்பொழுது ‘இஃது’ என வழியைச் சுட்டிக்காட்டி விடை கூறுதலின், அவ்விடை ‘சுட்டு விடை’ எனப்படும்.

‘நீ சினம் கொள்வாயா?’ என வினவும் பொழுது, ‘கொள்ளேன்’ என மறுத்து விடை கூறுதலின், அவ்விடை ‘மறை விடை’ எனப்படும்.

இவ்வாறு வருகின்ற ‘விடை’ எட்டுவகைப்படும். அவை, சுட்டு விடை, மறை விடை, நேர்விடை, ஏவல் விடை, வினாதல் விடை, உற்ற துரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை எனப்படும்.

1. சுட்டு விடை:

‘சென்னைக்கு வழி யாது?’ என்ற வினாவிற்கு ‘இஃது’ என்று வழியைச் சுட்டிக் காட்டிக் கூறுதல் சுட்டு விடை எனப்படும்.

2. மறை விடை:

‘சாத்தா இது செய்வாயா?’ என்ற வினாவிற்குச் ‘செய்யேன்’ என்று விடை கூறுதல் மறைவிடை எனப்படும்.

3.நேர் விடை:

‘சாத்தா இது செய்வாயா?’ என்ற வினாவிற்குச் ‘செய்வேன்’ என்று விடை கூறுதல் நேர்விடை எனப்படும்.

4. ஏவல் விடை:

‘சாத்தா உண்பாயா?’ என்ற வினாவிற்கு ‘நீ உண்’ என விடை கூறுதல் ஏவல் விடை எனப்படும்.

5. வினாதல் விடை:

‘சாத்தா படிப்பாயா?’ என்ற வினாவிற்குப் ‘படிப்பேனா’ என வினாவெதிர் வினாதலாக விடை கூறுதல், வினாதல் விடை எனப்படும். (இங்கு ஓகார இடைச்சொல் வினாப்பொருளில் வந்துள்ளது.)

6. உற்றதுரைத்தல் விடை:

‘சாத்தா நடப்பாயா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலித்தது’ என்று விடை கூறுதல் உற்ற துரைத்தல் விடை எனப்படும். ‘கால்