2.அறியாவினா: மாணவன், ஆசிரியரை நோக்கி ‘எட்டுத்தொகை ஜ்நல்கள் யாவை?’ என வினவுதல், அறியாமையால் அவற்றை அறிந்து கொள்ள எண்ணி வினவப்படுதலின் அறியாவினா எனப்படும். 3.ஐயவினா: ‘அவ் வடிவம் குற்றியோ மகனோ?’ என ஒருவர் வினவுதல், ஒன்றிலும் துணிவு பிறவாது வினவப்படுதலின் ஐயவினா எனப் படும். (குற்றிமரக்கட்டை) 4.கொளல்வினா: ‘பயறு உளதோ வணிகரே?’ என வினவுதல் அதனைக் கொள்ளும் பொருட்டு வினவப்படுதலின் கொளல்வினா எனப்படும். 5.கொடைவினா: ‘சாத்தா உனக்கு ஆடையில்லையா?’ என வினவுதல், அவனுக்கு ஆடையைக் கொடுக்கும் நோக்கமுடன் வினவப்படு தலின் கொடை வினா எனப்படும். 6.ஏவல் வினா: ‘சாத்தா உண்டாயா?’ என வினவுதல், அவனை உண்ணுமாறு ஏவும் பொருட்டு வினவப்படுதலின் ஏவல்வினா எனப்படும். இலக்கண விதி: அறிதலும், அறியாமையும், ஐயுறலும், கொள்ளுதலும், கொடுத்தலும், ஏவுதலுமாகிய அறுவகைப் பொருளையும் நீக்காது, வினா வகையாகக் கொள்வர். அறிவறி யாமை யையுறல் கொளல்கொடை ஏவ றரும்வினா வாறு மிழுக்கார். (ந-நூற்பா 385) 2. விடை வகை ‘மதுரைக்கு வழி யாது?’ - இஃது ‘நீ சனம் கொள்வாயா?’ - கொள்ளேன் |