76 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
3. பொது 1. வினாவகை இச் செய்யுளுக்குப் பொருள் யாது? அஃது அரவோ கயிறோ? மேற்கண்ட தொடர்கள் வினாப்பொருளைத் தருகின்ற மையால் வினாவாக்கியங்கள் எனப்படும். ஆசிரியர், தம் மாணவனை நோக்கி, ‘இச் செய்யுளுக்குப் பொருள் யாது?’ என வினவும் பொழுது, ஆசிரியர் அச் செய்யுளின் பொருளை அறிந்து கொண்டு தான் மாணவனை வினவுகின்றார். எனவே, இவ்வினா ‘அறிவினா’ எனப்படும். மாணவன், தன் ஆசிரியரை நோக்கி, ‘இச் செய்யுளுக்குப் பொருள் யாது?’ என வினவும்பொழுது, அவன் அச்செய்யுளின் பொருளை அறியாமையால் அதனை அறிந்துகொள்ள எண்ணிக் கேட்கின்றனாதலின், அப்பொழுது இவ்வினா ‘அறியாவினா’ எனப்படும். ‘அஃது அரவோ கயிறோ?’ என ஒருவர் வினவும்பொழுது, வினவுகின்றனர் என்றிலும் துணிவு பிறவாமல் ஐயமுற்றுக் கேட்கின் றாராதலின், இவ்வினா ‘ஐயவினா’ எனப்படும். (அரவு-பாம்பு) இங்ஙனம் வருகின்ற வினா ஆறுவகைப்படும். அவை, அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடை வினா, ஏவல்வினா எனப்படும். 1.அறிவினா: ஆசிரியர், மாணவனை நோக்கி ‘எட்டுத்தொகை நூல்கள் யாவை? என வினவுதல், அறிந்துகொண்டு வினவப்படுதலின் அறிவினா எனப்படும்.’ |