பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்89

மொழி ல வில் உள்ள அகரம் கெட நின்ற ல்-ற் ஆகத் திரிந்து பற்பல, சிற்சில எனவும் புணரும்.

பல+பல=பல்பல சில+சில=சில்சில

பல என்ற சொல்லுக்குமுன் பல என்ற சொல்லும், சில என்ற சொல்லுக்குமுன் சில என்ற சொல்லும் வந்து புணரும்பொழுது, நிலை மொழி ல வில் உள்ள அகரம் கெட நின்ற ல்-ற் ஆகத் திரியாமல், ஒரோவழி, பல்பல, சில்சில எனவும் புணரும். (பிற என்ற மிகை விதிப்படி)

பல+கலை=பலகலை, பல்கலை
சில+படை=சிலபடை,சில்படை
பல+நாள்=பலநாள்,பன்னாள்
சில+மணி=சிலமணி, சின்மணி
பல+யாழ்=பலயாழ், பல்யாழ்
சில+வளை=சிலவளை, சில்வளை
பல+அணி=பலவணி, பல்லணி
சில+அணி=சிலவாயம், சில்லாயம்

மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களை நோக்குங்கள்.

‘பல, சில’ என்ற சொற்களுக்குமுன் பிற பெயர்களாகிய வல்லினமும், மெல்லினமும், இடையினமும் உயிரெழுத்துக்களும் வந்து புணரும் பொழுது, அவை இயல்பாயும், ல வில் உள்ள அகரம் கெட்டு விகற்ப மாயும் புணரும். (விகற்பமாவது, அகரம் நின்றும், கெட்டும் புணர்வது)

பல+படை = பற்படை

சில+படை = சிற்படை

இங்ஙனம், ‘பல,சில’ என்பவை பிறபெயர்கள் வந்து புணரும் பொழுது, மேற்கூறிய விதிப்படி அகரம் விகற்பமாய்ப் புணராமல், நிலைமொழி ல வில் உள்ள அகரம் நீங்க நின்ற ல்-ற் ஆகத் திரிந்து புணர்தலும் ஒரோவழி உண்டு. (பிற என்ற மிகை விதிப்படி)

இலக்கண விதி: பல சில என்னும் இவ்விரு சொல்லும் தம் முன்னர்த் தாம் வருமாயின் இயல்பாகவும், வல்லினம் மிகுந்தும், நிலை மொழி ஈற்றில் உள்ள அகரம் கெட நின்ற ல்-ற் ஆகத்திரிந்தும் புணரும். இவற்றின் முன் பிறபெயர்கள் வந்து புணரும்பொழுது, ஈற்றில் உள்ள அகரம் கெட்டும், கெடாமலும் விகற்பமாய்ப் புணரும்.

பலசில வெனுமிவை தம்முன் றாம்வரின்
இயல்பு மிகலும் அகர மேக
லகரம் றகர மாகலும் பிறவரின்
அகரம் விகற்ப மாகலு முளபிற.

(ந-நூற்பா 170.)