பக்கம் எண் :

90கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

2. பூ என்னும் சொல்லின் புணர்ச்சி

பூ+கொடி=பூங்கொடிபூ+தடம்=பூந்தடம்
பூ+சோலை=பூங்சோலைபூ+பணை=பூம்பணை

மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களுள் பூ என்னும் சொல்லின் முன் ‘கொடி, சோலை, தடம், பணை’ என்ற சொற்கள் வந்து புணரும் பொழுது, வருமொழியில் உள்ள க், ச், த், ப் என்ற வல்லெழுத்துக்களுக்கு இனமாகிய ங், ங், ந், ம் என்ற மெல்லெழுத்துக் கள் இடையில் தோன்றியுள்ளன.

எனவே, பூ என்னும் பெயர்க்குமுன் வருமொழியில் க, ச, த, ப என்ற வல்லினம் வந்து புணரும் பொழுது, வருகின்ற வல்லின மெய்க்கு இனமாகிய மெல்லின மெய்யெழுத்து இடையில் வந்து தோன்றும்.

இங்ஙனம் புணர்வதோடல்லாமல், ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க, ச, த, ப மிகும்’ என்ற பொது விதிப்படி,

பூ + கொடி = பூக்கொடி

பூ + சோலை = பூச்சோலை

பூ + தொட்டி = பூத்தொட்டி

பூ + பொழில் = பூப்பொழில்

என, வரும் வல்லெழுத்தே மிக்குப் புணர்தலும் உண்டு.

இலக்கண விதி: பூ என்னும் பல பொருட்பெர்ச் சொல்லின் முன் க, ச, த, ப என்ற வல்லினம் வரின், பொது விதிப்படி மிக்குப் புணர்தலே அன்றி, வருகின்ற வல்லினத்திற்கு இனமாகிய மெல்லினம் இடையே தோன்றப் புணர்தலும் உண்டு.

பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும்.

(ந-நூற்பா 200.)

3. தெங்கு என்ற சொல்லின் புணர்ச்சி

தெங்கு + காய் = தேங்காய்

‘தெங்கு’ என்ற பெயர்ச் சொல்லின் முன் ‘காய்’ என்ற சொல் வந்து புணரும்பொழுது, நிலைமொழியாகிய தெங்கு என்பதில்