உள்ள முதல் எழுத்தாகிய ‘தெ’ என்பது ‘தே’ என நீண்டு, ஈற்றில் உள்ள ‘கு’ என்ற உயிர்மெய் கெட்டுத் தேங்காய் எனப் புணர்ந்தமை அறிக. ‘கெட்டே புணரும்’ என்று கூறாமையால் தெங்கு + காய் = தெங்கங்காய் (தெங்கு+அம்+காய்) என ‘அம்’ சாரியை பெற்றுப் புணர்தலும் உண்டு. இலக்கண விதி: காய் என்னும் சொல் வந்து புணரும் பொழுது, தெங்கு என்னும் சொல் முதல் நீண்டு, ஈற்றுயிர்மெய் கெட்டுப் புணரும். தெங்கு நீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின். (ந.நூற்பா 187.) 4. மரப் பெயர்ச் சொற்களின் புணர்ச்சி மா+பூ= மாம்பூ விள+காய்=விளங்காய் கள + கனி=களங்கனி ‘மா, விள, கள’ என்பன மரத்தைக் குறிக்கும் பெயர்ச் சொற்களாகும். அவற்றின் முன் ‘பூ, காய், கனி’ என்ற வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள் வரும்பொழுது, அங்ஙனம் வருகின்ற வல்லெழுத்துக்களுக்கு இனமான மெல்லெழுத்துக்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் வரும். ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க, ச, த, ப மிகும்’ என்ற பொது விதிப்படி, வாழை+காய்=வாழைக்காய் பலா+காய்= பலாக்காய் என்பனபோலச் சில இடங்களில் வல்லினம் மிக்குப் புணரும். எனவே, மரப்பெயர்களின் புணர்ச்சி அமைப்பைக் கொண்டு, வல்லினம் மிக்குப் புணர்வதை அறிந்து கொள்க. இலக்கண விதி: சில மரப் பெயர்ச் சொற்களுக்குமுன், பொது விதிப்படி வல்லெழுத்து மிகாமல் அவற்றின் இனமான |