பக்கம் எண் :

92கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

மெல்லெழுத்து வேற்றுமையில் வரப்பெறுவனவும் உள. (பொது விதிப்படி வல்லினம் மிக்குப் புணர்தலும் உண்டு.)

மரப்பெயர் முன்ன ரினமெல் லெழுத்து
வரப்பெறு னவுமுள வேற்றுமை வழியே.

(ந-நூற்பா. 166.)

5. தேன் என்னும் சொல்லின் புணர்ச்சி

(அல்வழி)

தேன்+கடிது=தேன்கடிது

தேன்+ஞான்றது=தேன்ஞான்றது

தேன்+யாது=தேன்யாது

தேன்+மொழி= தேன்மொழி, தேமொழி

தேன்+குழம்பு=தேன்குழம்பு, தேக்குழம்பு தேங்குழம்பு

(வேற்றுமை)

தேன்+கடுமை=தேன்கடுமை

தேன்+மலிவு=தேன்மலிவு

தேன்+யாப்பு=தேன்யாப்பு

தேன்+மலர்= தேன்மலர், தேமலர்

தேன்+குடம்=தேன்குடம், தேக்குடம், தேங்குடம்

மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சிகளிலும், தேன் என்ற சொல்லின்முன் மூவின மெய்களும் வரப் புணர்ந்துள்ளமை தெரியவரும்.

அங்ஙனம் புணரும்பொழுது.

தேன்கடிது, தேன்ஞான்றது, தேன்யாது என அல்வழி யிலும், தேன் கடுமை, தேன்மலிவு, தேன் யாப்பு என வேற்றுமை யிலும் மூவினமும் வர இயல்பாகப் புணரும்.