பக்கம் எண் :

10கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

கவிஞரின் படைப்புகள் பற்றி பல ஆய்வு நூல்களும், கட்டுரைகளும், வெளிவந்துள்ளன. கவிஞர் பற்றி பல்வேறு இதழ்கள், சிறப்பிதழ்கள் வெளியிட்டுள்ளன.

கவிஞரது படைப்புகள் தமிழ் நாட்டரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. (2000).

'இந்திய இலக்கியச் சிற்பிகள்' எனும் வரிசையில், 'முடியரசன்' வாழ்க்கை வரலாற்றை 'சாகித்திய அகாதமி' வெளியிட்டுள்ளது. (2005)

'கவியரசர் முடியரசன் அவைக்களம்', 'கவியரசர் முடியரசனார் முத்தமிழ் மன்றம்' 'கவிஞர் முடியரசன் இலக்கிய மன்றம்' எனும் அமைப்புகள் முறையே, காரைக்குடி, ஈரோடு, குடந்தை ஆகிய ஊர்களில் தமிழ்த்தொண்டு ஆற்றி வருகின்றன.

காரைக்குடியில் ஒரு பெரிய நெடுஞ்சாலைக்குக் 'கவியரசர் முடியரசன் சாலை' எனக் காரைக்குடி நகராட்சி மன்றம் பெயர் சூட்டிச் சிறப்பித்துள்ளது.

பெற்ற பாராட்டுகள்

பாவேந்தர் வழித்தோன்றல், புதுமைக் கவிஞர், கவி மா மன்னர், கவிச்சிங்கம், இருபதாம் நூற்றாண்டின் இமயக் கவிஞர், கவிதை இமயம், தமிழ்த்தவம் கொண்ட தலைமைக் கவிஞர், தமிழ்க் குடியரசின் கவிமுடியரசர், கவியுலக முடியரசர், சுய மரியாதைக் கவிஞர், தமிழிசைப் பாவலர். மரபின் மைந்தர். தமிழ் தேசீயக் கவிஞர் வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர், சொல்லும் செயலும் ஒத்த வாழ்வினர், வறுமையிலும் செம்மை போற்றியவர். திமிர்ந்த ஞானச்செருக்குடைய சங்கப்புலவரனையர், சங்கத் தமிழனைய தூயவர், பீடுநடையினர், பெருமித வாழ்வினர், நிமிர்ந்த நடையினர், நேர் கொண்ட பார்வையர், அண்டிப் பிழையார், ஆர்த்த வாழ்வினர், ஒட்டார் பின் செல்லாதவர், நல்லாசிரியர், பகுத்தறிவாளர், நன்றி மறவாதவர், நட்புப்பெரிதென வாழ்ந்தவர், மனிதநேயர், பழகுதற்கினிய பண்பாளர், பிறர்க்குதவும் ஏந்தல், சாதி தொலைத்தவர், சமயம் கடந்தவர் பதவி வெறுத்தவர், சமத்துவம் விரும்பி, விளம்பரம் விரும்பார், எளிமை வாழ்வினர், புகழ்கண்டு கூசுவார், அன்பு நெஞ்சினர், குழந்தை உள்ளத்தினர், பூமனத்தினர், இனிமைப் பேச்சினர், இளமை விரும்பி, அமைதி வாழ்வினர், குறிக்கோள் வாழ்வினர்.